இத தெரிஞ்சுக்காம சீம்பால் யாரும் சாப்பிடாதீங்க! 

Seembal
Seembal
Published on

பசு மாடு கன்று ஈன்ற உடனே முதல் மூன்று நாட்களில் சுரக்கும் பால் சீம்பால் எனப்படும். இது வழக்கமான பாலிலிருந்து நிறம், சுவை மற்றும் சத்துக்கள் அடிப்படையில் வேறுபட்டிருக்கும். சீம்பால் மஞ்சள் நிறத்தில் இருக்கும் மற்றும் இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

சீம்பாலில் உள்ள சத்துக்கள்:

  • Immunoglobulins நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கின்றன.

  • இதில் உள்ள என்சைம்கள் செரிமானத்தை எளிதாக்கி, உணவிலிருந்து சத்துக்களை நன்கு உறிஞ்சிக்கொள்ள உதவுகின்றன.

  • ஏ, டி, ஈ மற்றும் கே போன்ற வைட்டமின்கள் சீம்பாலில் நிறைந்துள்ளன. இவை எலும்புகள், பற்கள் மற்றும் தோல் ஆகியவற்றின் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை.

  • கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் எலும்புகளை வலுப்படுத்தி, மூட்டு வலியைக் குறைக்கின்றன.

சீம்பால் சாப்பிடுவதன் நன்மைகள்:

  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: சீம்பாலில் உள்ள இம்யூனோகுளோபுலின்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி, நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கின்றன.

  • செரிமானத்தை மேம்படுத்துகிறது: சீம்பாலில் உள்ள என்சைம்கள் செரிமானத்தை எளிதாக்கி, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கின்றன.

  • எலும்புகளை வலுப்படுத்துகிறது: கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை எலும்புகளை வலுப்படுத்தி, எலும்பு முறிவு மற்றும் மூட்டு வலி போன்ற பிரச்சினைகளைத் தடுக்கின்றன.

  • தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: சீம்பாலில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தோல் செல்களைப் புதுப்பித்து, முகப்பரு மற்றும் சுருக்கங்கள் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கின்றன.

  • நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது: மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, ஞாபக மறதி மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளைத் சீம்பால் உதவுகிறது.

  • புற்றுநோயைத் தடுக்கிறது: இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயத்தை குறைக்கின்றன.

இதையும் படியுங்கள்:
தயிர் பச்சடி சாப்பிடுவதால் எவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?
Seembal

சீம்பாலை எப்படி உபயோகிக்கலாம்?

சீம்பாலை நேரடியாகவோ அல்லது பாலுடன் கலந்து பருகலாம். மேலும் இதைக் கொண்டு பால் பொருட்கள், தயிர், பனீர் போன்றவற்றை தயாரிக்கலாம். சீம்பாலை கொண்டு முகப்பூச்சு தயாரித்து முகத்தில் பூசி, தோல் பிரச்சினைகளைத் தீர்க்கலாம்.

பசு மாட்டின் சீம்பால் இயற்கையின் அமுதம் என்றால் மிகையாகாது. இது பல்வேறு நோய்களைத் தீர்க்கும் சக்தி வாய்ந்தது. ஆனால், சீம்பால் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே குறைவாகவே உள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com