வெயிட் லாஸ் முதல் சர்க்கரை நோய் வரை.. வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீரை குடித்தால் இத்தனை நன்மைகளா?

இஞ்சி தண்ணீர்
இஞ்சி தண்ணீர்

இயற்கை நமக்கு பல வரபிரசாதங்களை அளித்துள்ளது. அதில் ஒன்று தான் இஞ்சி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இஞ்சி, பல நோய்களுக்கு அரு மருந்தாக உதவுகிறது.

உணவுகளுக்கு சுவையூட்டுவதைத் தவிர, பாரம்பரியமாக ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் இது பல ஆரோக்கிய நன்மைகள் மற்றும் குணப்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது. இஞ்சி உங்கள் சருமம், முடி மற்றும் உடலுக்கு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளின் சக்தியாக உள்ளது.

வீட்டில் தினசரி உபயோகப்படுத்தும் இஞ்சியில் இருக்கும் எண்ணற்ற நன்மைகளை அறிந்தால், நீங்கள் தினமும் இஞ்சியை அதிகமாக உபயோகப்படுத்த தொடங்கி விடுவீர்கள். இஞ்சி பொதுவாகவே வயிற்றில் உள்ள பிரச்சனைகளை சரியாக்கும் என்று சொல்வார்கள். குமட்டல், வாந்தி என அனைத்திற்கு இஞ்சி ஒரு வரபிரசாதம் ஆகும். காலையில் தினசரி நீங்கள் இஞ்சி எடுத்து கொண்டால் அது உங்களது நாளை முழுவதுமாக புத்துணர்வாக வைத்திருக்கும்.

இஞ்சி மிகவும் காட்டமாக இருப்பதால், நீங்கள் அதை தட்டி தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிடுவதன் மூலம் இந்த 5 பல்ன்களை நேரடியாக பெறலாம். விடிந்ததும் தினமும் காலை இஞ்சி தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்து கொள்ளுங்கள்

1. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: இஞ்சியில் ஆண்டி ஆக்சிடண்ட் அதிகமாக இருப்பதால், இஞ்சி தண்ணீர் உங்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். உங்கள் உடலில் உள்ள பேக்டீரியாக்களை அழித்து ஆரோக்கியமான வாழ்க்கையை கொடுக்கும்.

2. குமட்ட்டலுக்கு குட்பாய்:

குமட்டல், வாந்தி என அனைத்திற்கும் இஞ்சி நல்ல பயனளிக்கும். உங்களுக்கு வாந்தி வருவது போன்று தோன்றினால் உடனே இஞ்சி தண்ணீரை பருகுங்கள். இது உங்களை புத்துணர்வாக்க உதவும்.

3. உடல் எடை குறைப்பு: பெண்கள், ஆண்கள் என பலருக்கும் இருக்கும் பெரிய கவலை எடை குறைப்பு தான். எடையை குறைக்க ஏராளமானோர் நிறைய வழிகளை தேடி வரும் நிலையில், அவர்களுக்கு இஞ்சி தண்ணீர் மிகவும் உதவியாக இருக்கும். மேலும் இஞ்சி தண்ணீர் உங்கள் தொப்பையையும் குறைத்து ஸ்லிம்மாக வைத்து கொள்ள உதவும்.

4. சுகர் கண்ட்ரோல்: இஞ்சி தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் உங்கள் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். மேலும் உங்களின் இதய நன்மைக்கும் அது வழிவகுக்கும்.

5.நோய்களை தடுக்கும்: இஞ்சியில் விட்டமின் சி, கேல்சியம்ம் இரும்பு, காப்பர் என எண்ணற்ற சத்துக்கள் இருப்பதால் உங்களுக்கு எந்த நோயை சீக்கிரம் அண்ட விடாது. தினமும் இஞ்சி தண்ணீர் குடித்து வருவதால், உங்களது எனெர்ஜி லெவெல் அதிகரித்து உங்களை துருதுருவென ஓட வைக்க உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com