முக்கனிகளின் ஒன்றான மாம்பழம் அதன் சுவைக்காக மிகவும் புகழ் பெற்றதாகும். இதுவரை மாம்பழம் என்றாலே அதை அப்படியே வெட்டி சாப்பிடுவதுதான் வழக்கமான நடைமுறை. ஆனால் அதை பாலுடன் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பாலில் மாம்பழம் கலந்து சாப்பிடுவதன் நன்மைகள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
ஊட்டச்சத்து சேர்க்கை: மாம்பழங்களில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளன. அதேபோல பாலில் கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின் டி ஆகிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது உடலுக்குத் தேவையான சிறந்த ஊட்டச்சத்து ஆதாரமாகத் திகழ்கிறது.
நோய் எதிர்ப்பு: மாம்பழங்களில் நிறைந்துள்ள விட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வைட்டமின் டி கொண்ட பாலுடன் இணைத்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் மேலும் மேம்படும். வைட்டமின் டி, நோய் எதிர்ப்பு சக்தியை சீராக்க உதவுகிறது மற்றும் நோய் தொற்றுகளுக்கு எதிராக பாதுகாப்பை ஊக்குவிக்கிறது.
செரிமான ஆரோக்கியம்: மாம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி நல்ல குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. மறுபுறம், பாலில் இருக்கும் லாக்டோஸ் பல நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மாம்பழம் மற்றும் பால் கலவையானது செரிமான ஆரோக்கியத்திற்கு ஊக்கமளித்து மலச்சிக்கலைத் தடுத்து ஆரோக்கியமான குடலுக்கு வழிவகுக்கிறது.
ஆற்றலை வழங்கும்: மாம்பழங்களில் ஃப்ரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் போன்ற இயற்கை சக்கரைகள் நிறைந்துள்ளன. இவை உடலுக்குத் தேவையான விரைவான ஆற்றலை வழங்கும். பாலில் நிறைந்துள்ள புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளின் கலவையானது, உடலுக்கு நீடித்த ஆற்றலை வாங்குகிறது. இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து உட்கொள்ளும்போது மாம்பழம் மற்றும் பாலின் மொத்த ஆற்றலும் உடலுக்குக் கிடைக்கிறது.
எலும்பு ஆரோக்கியம்: பால் அதன் கால்சியம் உள்ளடக்கத்திற்கு நன்கு அறியப்பட்டதாகும். இது வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க அவசியம். பாலில் மாம்பழத்தை சேர்த்து சாப்பிடுவதால் எலும்பு வளர்ச்சி மற்றும் அதன் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும். இது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நிலைமைகள் எனப்படாமல் பார்த்துக்கொள்ளும்.
சரும ஆரோக்கியம்: பால் மற்றும் மாம்பழம் இரண்டிலும் சருமகத்திற்கு நன்மை செய்யும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மாம்பழத்தில் விட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன. இது ஃப்ரீ ரேடிகல் சேலத்திலிருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது. மாம்பழத்தை பாலில் கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமத்திற்கு பங்களிக்கும்.