செம்மயிர்கொன்றை மரங்களில் எவ்வளவு நன்மைகள் உள்ளன தெரியுமா?

Gumohar tree
Gumohar
Published on

கோடைக்காலங்களில் இந்தியாவின் பல நகரங்களில் சாலையோரங்களில் சிவப்பு மற்றும் மஞ்சள் ஆகிய பூக்களால் பூத்துக்குலுங்கும் மரம் செம்மயிர்கொன்றை.

செம்மயில் கொன்றை என்றும் அழைக்கப்படும் இந்த மரத்தை ஆங்கிலத்தில் Gulmohar மரம் என்று அழைப்பார்கள். மேலும் பெங்காலி மக்கள் சிவப்பு மலர்கள் பூக்கும் மரத்தை Krishna Chura என்றும், மஞ்சள் நிறங்களில் பூக்கும் மரங்களை Radha Chura என்றும் அழைப்பார்கள். இந்த மரத்தின் பட்டை, இலைகள் மற்றும் பூக்களில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. அந்தவகையில், இந்த மரத்தின் சில ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.

வயிற்றுப்போக்கு கோளாறுகளால் அவதிப்படுபவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும். இந்த மரத்தின் பட்டையை பொடி செய்து சாப்பிடலாம். இது வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. அதேபோல், இரவில் சிறிய துண்டு பட்டையை தண்ணீரில் போட்டு ஊற வைத்துவிட்டு காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் அந்தத் தண்ணீரைக் குடித்து வந்தால், அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

அதிக அளவு முடி உதிர்கிறது என்றால், இந்த மரத்தின் இலைகளை அரைத்து பவுடராக்கி வெதுவெதுப்பான நீரில் குழைத்துத் தலை மற்றும் கூந்தல் முழுவதும் தடவுங்கள். இதனை வாரம் ஒரு மூன்று முறை செய்து வந்தால், தலையில் இருக்கும் வேர் வலுவாகி, முடி உதிர்வது அடியோடு நின்றுவிடும்.

சிலருக்கு வாய்ப்புண் ஏற்பட்டால் சாப்பிடவே முடியாதப்படி வலி எடுக்கும். அவர்கள் செம்மயிர்க்கொன்றை பட்டையின் பொடியை தேன் கொண்டு குழைத்து புண் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் வாய்ப்புண் குணமாகும். பொதுவாக வயிற்றில் புண் இருந்தால் தான் வாயில் புண் வரும் என்று சொல்வார்கள். இந்த பொடியை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள புண்களோடு சேர்ந்து வாய்ப்புண்ணும் ஆறும்.

இப்போது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே வாதநோய் ஏற்படுகிறது. அப்படி கீழ் வாத நோய் ஏற்பட்டால், முட்டி வலி உயிரை எடுக்கும். அவர்கள் மஞ்சள் நிற செம்மயிர்க்கொன்றை மரத்தின் இலைகளை எடுத்து அரைத்து வலியுள்ள இடத்தில் தடவி வரலாம். இது வலியில் இருந்து நிவாரணம் அளிக்க உதவி செய்யும்.

இந்த மரத்தில் உள்ள ஆன்டி டயாபெட்டிக் பண்புகள் மற்றும் இலையில் உள்ள மெத்தனால் சாறு ஆகியவை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த ஆயுர்வேதம் கூறும் 7 ஆரோக்கிய பானங்கள்!
Gumohar tree

மாதவிடாய் காலங்களில் அவதிப்படும் பெண்கள், செம்மயிர்க்கொன்றை பூக்களை பவுடராக்கி தேனுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் வலி நீங்கும். இது நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

மிக எளிதாக நமக்குக் கிடைக்கக்கூடிய இந்த மலரை கழுவி வெயில் இல்லாத இடங்களில் நன்றாகக் காயவைத்து பொடி செய்து இறுக்கமாக பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் இது பல வழிகளில் நமக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com