சருமத்துக்கு இளமைப் பொலிவைத் தரும் வைட்டமின் சி பலன்கள்!

Benefits of vitamin C to give skin a youthful glow
Benefits of vitamin C to give skin a youthful glowhttps://pharmeasy.in
Published on

ழகு என்பது ஆரோக்கியமான உணவு முறைகள் மற்றும் வாழ்க்கை முறைகளால் உருவாவது. ஆரோக்கியமான சிந்தனைகள் அக அழகுக்கும் உணவு மூலம் எடுத்துக்கொள்ளும் சத்துக்கள் புற அழகிற்கும் உதவுகிறது. நம் ஆரோக்கியம் காக்கும் பலவகையான வைட்டமின்கள் இருந்தாலும், இளமைத் தோற்றம் தந்து சருமத்தைக் காக்கும் வைட்டமின் சி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. வைட்டமின் சி சத்தின் நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

பொதுவாக, மக்கள் சருமம் மற்றும் பிற ஆரோக்கிய நலன்களுக்காக உணவுகளுடன், இணை உணவாக வைட்டமின் சி அடங்கிய மாத்திரைகள் மற்றும் மேற்பூச்சு கிரீம்களை எடுத்துக்கொள்கிறார்கள். இதிலுள்ள சரும ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத அஸ்கார்பிக் அமிலம் எனும் நீரில் கரையக்கூடிய ஊட்டச்சத்து மனித சருமத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

வைட்டமின் சியில் சருமத்தை இளமையாகவும், பொலிவாகவும் மாற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது எபிடெர்மிஸ் மற்றும் டெர்மிஸ் சரும அடுக்குகளில் உள்ளது. இது உடல் ஆக்ஸிஜனேற்றத்தை உறிஞ்சி இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. மேலும், அவை கொலாஜன் தொகுப்பு மற்றும் திசு சரி செய்தலை ஊக்குவிக்கும்போது ஃப்ரீரேடிக்கல்களை அழிக்கின்றன. ஆனாலும், புற ஊதா கதிர்வீச்சு, மாசுபாடு மற்றும் முதுமை ஆகியவற்றின் வெளிப்பாடு வைட்டமின் சி கிடைப்பதைக் குறைக்கிறது. ஆனால், வைட்டமின் சி மாத்திரைகளை எடுத்துக்கொள்வதன் மூலமோ அல்லது  முகத்திற்கு வைட்டமின் சி கிரீம் போன்ற பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலமோ இதைத் தேவையான அளவு பெறலாம்.

வயதான அறிகுறிகள் உங்கள் அழகைக் கெடுக்கும். முகத்திற்கு வைட்டமின் சி கிரீம்கள் பயன்படுத்துவதால் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் தோற்றத்தை மேம்படுத்துகிறது. அதேநேரத்தில் சரும சுருக்கங்கள் மற்றும் அழகைப் பாதிக்கும் கோடுகளைக் குறைத்து வயதான தோற்றத்தைத் தடுக்கலாம் அல்லது குறைக்கலாம்.

சருமத்தில் ஏற்படும் பிக்மென்டேஷனைக் குறைக்க விட்டமின் சி உதவுகிறது. ஹைப்பர் பிக்மென்டேஷன் அல்லது டார்க் பிக்மென்டேஷன் ஆகியவை மெலனின் அதிகப்படியான உற்பத்தியால் ஏற்படுகிறது. இது பாதிப்பில்லாதது என்றாலும், ஹைப்பர் பிக்மென்டேஷன் ஒருவரின் அழகைக் கெடுக்கும். வைட்டமின் சி உபயோகிப்பது முகத்திலுள்ள கருமையான திட்டுகளை குறைப்பதன் மூலம் அழகு தரும். மேலும் இதிலுள்ள புரோட்டீன் நார்ச்சத்துகள் சருமத்தை உறுதியாகவும் இறுக்கமாகவும் ஆக்குகின்றன.

இதையும் படியுங்கள்:
மனித மனங்களை வெல்லும் சூட்சுமம் தெரியுமா?
Benefits of vitamin C to give skin a youthful glow

வைட்டமின் சி சருமத்தின் காயங்களை குணப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறது. சூரியனின் கதிர்களால் சருமத்தில் கடினத்தன்மை மற்றும் சருமம் சிவத்தல் ஆகியவை ஏற்படும். இதைத் தடுக்க வைட்டமின் சி சீரம் பயன்படுத்தலாம். இது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட்டு சருமத்தை அபாயகரமான புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது. மேலும், சருமத்தில் தண்ணீரைத் தக்கவைக்க உதவுகிறது. எனவே, சரும வறட்சியைக் குறைக்க தேவையான ஈரப்பதம் வழங்கும் இந்த வைட்டமின் சி மாத்திரைகள் உங்கள் சருமத்தை நீரிழப்பிலிருந்து பாதுகாக்கும்.

பொதுவாக, மேற்பூச்சு பயன்பாடுகள் மற்றும் உணவுகள் மூலம் வைட்டமின் சி பெறுவதே பாதுகாப்பானது. வைட்டமின் சி சப்ளிமெண்ட் உள் எடுப்பவர்களில் சிலர் ஒவ்வாமை மற்றும் உலர் சருமம் உள்ளவர்கள் மஞ்சள் நிற சரும நிறமாற்றத்தை அடையலாம். மேலும் சிலர் அரிப்பு, வறட்சி மற்றும் முடி கொட்டுதல் போன்ற பிரச்னைகளை அனுபவிக்கின்றனர். தற்போது, ஜெல் மற்றும் காப்ஸ்யூல்கள் வடிவில் வைட்டமின் சி கிடைக்கிறது. ஒவ்வாமை உள்ளவர்கள் மட்டுமின்றி, பொதுவாகவே இதுபோன்ற வைட்டமின் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரையின்படி வாங்கி பயன்படுத்துவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com