சாமந்திப் பூ காயங்களை, புண்களை விரைவில் ஆற்றும் தன்மை கொண்டது. உடலின் கொலஜின் மற்றும் தசை வளர்ச்சிக்கு, இரத்த ஓட்டத்தைத் துரிதப்படுத்த இதன் சாறு பயன்படுகிறது. கால் பாதங்களில் ஏற்படும், ‘ரிங் வார்ம்’ எனும் சேற்றுப்புண்களைச் சாமந்திப் பூவின் சாறு ஆற்றும். பூச்சி கடித்த இடத்தில் அலர்ஜி ஏற்படாமல் இருக்க, இந்தப் பூவின் சாற்றை பூசலாம் என்கிறார்கள்.
சாமந்திப்பூ 20 கிராம் எடுத்து 350 மில்லி வெந்நீரில் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைத்திருந்து பின்னர் வடிகட்டி ஒரு வேளைக்கு 5 மில்லி சாப்பிட தலைவலி, உடல் குடைச்சல், உப்புசம் தீரும். சுளுக்கு, வீக்கம் முதலியவற்றிற்கும் இதை ஒற்றடம் கொடுக்கலாம். சாமந்திப்பூக்கள் இட்டு காய்ச்சிய தைலத்தை கீல்வாத வீக்கங்களுக்குப் பூசலாம்.
தற்போது பலர் கல்லீரல் பிரச்னையால் அவதிப்படுகின்றனர். இதன் காரணமாக, நீங்கள் அவசரமாக சாப்பிட்டாலோ, குறைந்த அளவு நல்ல உணவை உண்டவுடன் வயிற்றெரிச்சல் தொடங்குகிறது. ஆனால், இந்த பிரச்னைகளை ஒரு சிறப்பு மலர் தேநீர் மூலம் அகற்றலாம். இந்த டீயை காலை மற்றும் மதியம் குடித்து வந்தால் கல்லீரல் வலுவடையும். அதேசமயம் உணவை ஜீரண சக்தியும் அதிகரிக்கும். அந்த சிறப்பு மலர் சாமந்தி பூ. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களை அகற்ற கல்லீரலுக்கு உதவுகிறது. இனி, சாமந்தி பூ டீ செய்முறையை தெரிந்துகொள்ளுங்கள்:
சில சாமந்திப்பூ இதழ்களைப் பிரித்து வெயிலிலோ அல்லது திறந்த வெளியிலோ நன்கு காய வைக்கவும். பிறகு 1 கப் தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைக்கவும். ஒரு தேக்கரண்டி உலர்ந்த பூக்களைக் கொதிக்கும் நீரில் விடவும். இப்போது அதை மூடி 8 முதல்10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைக்கவும்.
அதன் பிறகு, அதை அடுப்பிலிருந்து இறக்கி, அந்தத் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாமந்திப் பூ தேநீர் தயாரிக்கவும். இந்த டீயைத் தொடர்ந்து காலை மற்றும் மதியம் குடித்து வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும். சாமந்திப்பூ டீ தொண்டைப் புண்களை ஆற்றும். சாமந்திப்பூ கசாயம் கொண்டு வாய் கொப்பளித்தால் ஈறுகளில் ஏற்படும் இரத்தக் கசிவு நிற்கும்.
பலதரப்பட்ட வியாதிகளுக்கு சாமந்திப்பூ மருந்தாக உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டெக்சாஸ் யூனிவர்சிட்டி ஆய்வில் சாமந்திப்பூ டீ சாப்பிட்ட பெண்களின் இறப்பு விகிதம் 29 சதவீதம் குறைவது தெரிய வந்தது. சாமந்திப்பூ ஹைபர்குளேசியா, வயிற்றுப் பிரச்னை, சர்க்கரை நோய், மன இறுக்கம் போன்ற நோய்களைக் குணப்படுத்தும். தொடர்ந்து சாமந்திப்பூ டீ சாப்பிடும் பெண்களின் அதிகப்படியான கொலஸ்ட்ரால் படிப்படியாக குறைவதும் தெரியவந்தது. சாமந்திப்பூவில் அதிகளவில் நோய் எதிர்ப்பு ஆற்றல், ஆன்டி இம்பிளமென்ட்ரி பண்புகள் இருப்பது ஆய்வில் தெரிய வந்தது.
சாப்பாட்டுடன் சீமை சாமந்திப்பூ டீயும் சேர்ந்து குடித்தால் நீரிழிவு நோய் வராது. மற்றும் அந்த நோயினால் ஏற்படும் நரம்பு பாதிப்பு, பார்வை பிறழ்வு, சிறுநீரகக் கோளாறு போன்றவையும் ஏற்படாது என ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.