

‘முட்டை சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? தினமும் சாப்பிடலாமா? கூடாதா? அது உடல் நலனை பாதிக்குமா? கொலஸ்ட்ராலை அதிகரித்து இதய நோயை வரவழைக்குமா?’ என்று பலருக்கும் குழப்பமாக இருக்கும். இந்தப் பதிவில் ஒருவர் தினமும் எத்தனை முட்டை சாப்பிடலாம். முட்டையில் உள்ள நன்மைகள் என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.
முட்டையின் வெள்ளை கரு: ஒரு முட்டையின் எடையில் சுமார் 60 சதவீதம் வெள்ளை கருவும், 30 சதவீதம் மஞ்சள் கருவும் உள்ளன. வெள்ளை கருவில் 90 சதவீதம் தண்ணீர்தான் இருக்கிறது. 10 சதவீதம் மட்டுமே புரதம் இருக்கிறது. கொழுப்பும் சுத்தமாக இல்லை. கார்போஹைட்ரேட் சத்தும் மிகக்குறைவு. கார்போஹைட்ரேட் 1.12 கிராம், கொழுப்பு 10.6 கிராம், கொலஸ்ட்ரால் 373 மி.கி. உள்ளன.
மஞ்சள் கரு: மஞ்சள் கருவில் 100 சதவீதம் கொழுப்பு உள்ளது. இதில் எலும்புகளுக்கும், பற்களுக்கும் வலு தரக்கூடிய வைட்டமின் டி உள்ளது. இந்த மஞ்சள் கருவிலிருக்கும் அதிகபட்ச கொழுப்பால், ஹார்ட் அட்டாக் வரும் என்கிறார்கள். ஆனால், அதற்குப் பிறகு நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில், ஆபத்து எதுவும் கிடையாது என்று தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்ல, வாரம் 6 முட்டைகளை சாப்பிடுபவர்களின் இரத்த அளவு ஒரே நிலையில்தான் இருக்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
முட்டையில் உள்ள நன்மைகள்: முட்டையில் பல ஊட்டச்சத்துக்கள், புரதங்கள், பாஸ்பரஸ், அயோடின், செலினியம், இரும்பு மற்றும் துத்தநாகம் உள்ளன. முட்டையின் வெள்ளைக்கருவில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. மஞ்சள் கருவில் 275 மில்லி கிராம் கொழுப்பு, பி6, ஃபோலேட், பி வைட்டமின், பி12, ஏ, டி, ஈ மற்றும் கே வைட்டமின்கள் அடங்கியுள்ளன. முட்டை சாப்பிடுவதால் 70 முதல் 80 கலோரிகள், 6 கிராம் புரதம், 5 கிராம் கொழுப்பு மற்றும் 190 கிராம் கொலஸ்ட்ரால் கிடைக்கிறது.
வேக வைத்த முட்டையை சாப்பிட்டு வருவதால் மூளை வேகமாக செயல்படும். படிக்கும் மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. முட்டையில் இருக்கக்கூடிய omega 3, fatty acid உடல் மற்றும் இதயத்திற்கு மிகவும் பாதுகாப்பு அளிக்கக்கூடிய ஒன்றாகும். புற்றுநோயை தடுக்கக்கூடிய செல்கள் உடலில் அதிகமாக உருவாகிறது. பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை தடுக்கிறது.
எத்தனை முட்டை எடுத்து கொள்ளலாம்? பொதுவாக, முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் 3 அல்லது 4 முட்டை வரை சாப்பிடலாம். கணினி முன்பு அமர்ந்து வேலை செய்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை எடுத்துக் கொண்டாலே போதும். உடல் உழைப்பு அதிகமுள்ள வேலைகளில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிடலாம். உடல் பருமன் அதிகமாக கொண்டவர்கள் மற்றும் முதியவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவினை மட்டுமே சாப்பிடுவது நல்லது.