புற்றுநோயை தடுக்கும் உணவுகள்: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஆய்வு குறிப்புகள்!

ஆரோக்கியமான உணவு வகைகள்: புற்றுநோய் எதிர்ப்பில் சிறந்த பழங்களும் காய்கறிகளும்!
Foods that prevent cancer
Foods that prevent cancerImg Credit: Medium

விஞ்ஞானம் வளர்ந்தாலும் பல நோய்களும், அதன் காரணங்களும் சரியாக கணிக்க முடியாமல் தான் உள்ளது. குறிப்பாக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது எனலாம். ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து விட்டால் எளிதில் குணமாக்கக் கூடிய  சாத்தியங்களை மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இளமையிலேயே மருத்துவ பண்புகளைக் கொண்ட உணவுகளை உண்டு, நோய் எதிர்ப்பு திறனை வளர்க்கும் ஆகாரங்களையும், உடல் பயிற்சிகளையும் வழக்கமாக்கினால், எந்த நோய்க்கும் நாம் எளிதில் ஆளாக மாட்டோம்.

புற்றுநோயைத் தடுக்கும் பழங்கள்:

  • அடர்நிறப்பழங்களில்  'ஃப்ரீ ரேடிக்கல்ஸை' வெளியேற்றும் ஆற்றல் அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக சிவப்பு, நீலம், பர்ப்பிள் நிறப் பழங்களில் 'ஆந்தோசைனின்' என்ற நிறமி சத்து அதிக அளவில் இருப்பதால் புற்றுநோய் வரவிடாமல் தடுக்கும்.

  • பெரிய நெல்லிக்காய், நாவல் பழம், ராமர் சீதா போன்ற பழங்கள் புற்றுநோயைத் தடுக்க வல்ல பழங்கள் என ஆய்வுகள் கூறுகின்றன.

  • சிட்ரஸ் பழங்களில் நார்ச்சத்து, தாது உப்புக்கள், வைட்டமின்களும் அதிகமாக இருப்பதால் புற்றுநோய் வரவிடாமல் தடுக்கும்.

  • கருப்பு திராட்சை, மாதுளை, செர்ரி, மாம்பழம், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மூங்கில் அரிசியின் முத்தான 5 முக்கியத்துவங்கள்!
Foods that prevent cancer

புற்றுநோயைத் தடுக்கும் காய்கறிகள்:

  • சிவப்பு தக்காளி, கேரட், கரும்பச்சை இலைகளைக் கொண்ட காய்கறிகள், கீரை வகைகள், சர்க்கரை வள்ளி கிழங்கு ஆகியவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன் புற்றுநோயிலிருந்து நம்மை காக்கும்.

  • நம் உடலில் உள்ள வைட்டமின் குறைப்பாட்டுக்கும் , புற்றுநோய் செல்களின் பெருக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வைட்டமின் ஏ சத்தில் உள்ள அதிகப்படியான ரெட்டினோயிக் அமிலம் புற்றுநோயை கட்டுக்குள்‌ கொண்டு வருகிறது.

  • தக்காளியில் அதிக அளவில் வைட்டமின் சி மற்றும் புற்றுநோயைத் தடுக்கும் லைகோபைன் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் இருப்பதால் புற்றுநோயால் செல்கள் பாதிப்படைவதைத் தடுக்கும்.

  • நார்ச்சத்து இல்லாத கடின உணவுகள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட் உணவுகளை தவிர்த்தல் நல்லது. காய்கறிகள், கீரைகள் சேர்த்து செய்த சால்ட், தானியங்கள், பழங்கள் என சரி விகித உணவை எடுத்துக் கொள்ள உடல் ஆரோக்கியம் மேம்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com