
ஆரோக்கிய பலன்கள் பலவற்றை கொண்டது முந்திரி. நாம் உண்ணும் உணவே பல நேரங்களில் மருந்தாகவும், நோய் தடுப்பு காரணியாகும் இருக்கின்றது. அவற்றில் இந்த முந்திரியின் பயன்பாடு குறிப்பிடத்தக்கது. முந்திரி மற்றும் முந்திரி பழத்தில் துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
மேலும் இது சுவாசக் கோளாறுகளிலிருந்து நம்மை பாதுகாக்கத் கூடியது. இதில் நிறைந்துள்ள சத்துக்களானது நமது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதுடன் நோய்கள் வராமல் தடுக்கின்றது. முந்திரியில் 100 கிராம் 550 கலோரிகள் இருக்கும். செறிவூட்டப்பட்ட கொழுப்புகள் 75 சதவிகிதம் உள்ளன. இவை தவிர நார்ச்சத்தின் அளவும், அதிகம் உள்ளது.
முந்திரியில் (Cashew nut) சோடியம் குறைவாக மற்றும் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் அவை ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைக்கிறது.
பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக பாதுகாக்க முந்திரி உதவுகிறது. இது பல் வலியை சரி செய்வதோடு காசநோய் மற்றும் தொழுநோய் ஆகியவற்றையும் குணப்படுத்துகிறது. முந்திரியில் காப்பர் அதிக அளவில் உள்ளதால் பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கிறது.
முந்திரி (Cashew nut) 4,5 சாப்பிடுவதால் பசி நீண்ட நேரத்திற்கு தாங்கும்.
டைப்2 சர்க்கரை நோயை பாதுகாக்கும் ஆற்றல் முந்திரிக்கு உண்டு. முந்திரியை அளவாக சாப்பிட்டு வர ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளதால் ஆரோக்கியத்தை காக்கும். மேலும் ரத்த நாளங்கள், மூட்டுக்கள் மற்றும் எலும்புகளுக்கு முந்திரி ஆரோக்கியம் தருகிறது.
வளரும் குழந்தைகளின் எடையை அதிகரிக்க முந்திரியை கொடுக்கலாம். ஞாபகதிறன் மேம்பட குழந்தைகளுக்கு முந்திரி, பாதாம் போன்ற கொட்டைகள் பயன் தரும். அவர்களது செயல்திறன் அதிகரிக்கச் செய்வதோடு சரும பளபளப்பையும் தரும். இவ்வாறு பல பலன்கள் கொண்ட முந்திரியை அளவாக சாப்பிட்டு வர ஆரோக்கியம் மேம்படும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)