நுரையீரல் புற்றுநோய்க்கு காரணங்களும் தீர்வுகளும்!

ஆகஸ்ட் 1, உலக நுரையீரல் புற்றுநோய் எதிர்ப்பு தினம்
நுரையீரல் புற்றுநோய்
நுரையீரல் புற்றுநோய்
Published on

நுரையீரல் புற்றுநோய்க்கு சிகரெட் புகைத்தல் முக்கிய காரணமாகும். புகைப்பிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்கள் நுரையீரல் புற்றுநோய் தாக்குதலுக்கு அதிகம் ஆளாகிறார்கள். புகைப்பிடிப்பவர்கள் எந்த நேரத்திலும் புகைப்பதை நிறுத்தலாம். அதனால் நுரையீரல் புற்றுநோய் அபாயத்திலிருந்து தப்பலாம். காரணம், நுரையீரலின் காற்று பையை அழித்துக் கொண்டிருக்கும் செல்கள் புதிய செல்களின் உற்பத்தி மூலம் நுரையீரல் தம்மை மாற்றியமைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையது என்பதை ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதனால் உடனே புகைப்பதை நிறுத்தி நுரையீரல் புற்றுநோயிடமிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள்.

புகைப்பிடிப்பவர்கள் தினமும் பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிட, பால் கலக்காத டீ குடித்தால் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் கலக்காத டீயில் பிளாவனாய்டு என்ற கூட்டுப் பொருட்கள் இருப்பதால் இரத்தத்தில் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுத்து அவற்றை கட்டுப்படுத்துகின்றன என்கிறார்கள்.

இந்தியாவில் நுரையீரல் புற்று நோய் அதிர்ச்சி அளிக்கக்கூடிய  வகையில் அதிகமாகி வருகிறது. தொடர்ந்து காற்று மாசு சூழலில் வாழ்வதே இதற்குக் காரணம் என நம்பப்படுகிறது. இதில் ஒரு அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்தி என்னவென்றால் இந்த நோயாளிகளில் பெரும்பாலானோர் புகை பிடிப்பவர்கள் அல்லர். டாட்டா மெமோரியல் மருத்துவமனை நிபுணர்களை உள்ளடக்கிய ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் பல முக்கிய விஷயங்கள் வெளிவந்துள்ளன. மேலை நாடுகளில் நுரையீரல் புற்றுநோய் கண்டுபிடிக்கப்படுவது 54 வயதிலிருந்து 70 வயதிற்குள்; ஆனால் இந்தியாவில் இதற்கு பத்து வயது முன்னரே இந்நோய்  ஏற்படுகிறது என்று தெரிய வந்துள்ளது.

கிளைசெமிக் அதிகமுள்ள உணவுப்பொருட்களான பிரட், கார்ன் பிளேக்ஸ், வெள்ளை அரிசி உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்கிறவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம் என்கிறார்கள் அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

நீராவி சிகிச்சை அல்லது ஆவி பிடித்தல் நுரையீரலை இயற்கையான முறையில் சுத்தம் செய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆவி பிடிக்கும் தண்ணீரில் கற்பூரம், எலுமிச்சை தோல் அல்லது யூகலிப்டஸ் எண்ணெய் சேர்க்கலாம். உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொள்ளுங்கள். நுரையீரலை சுத்தம் செய்ய, வழக்கமான சுவாசப் பயிற்சிகள் அல்லது பிராணாயாமம் செய்யுங்கள். இது நச்சுக்களையும் அழுக்குகளையும் வெளியேற்றி நுரையீரல் திறனை அதிகரிக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
வாகனம் ஓட்ட R.T.O. ஆபீஸில் ஏன் 8 போட வேண்டும் தெரியுமா?
நுரையீரல் புற்றுநோய்

நுரையீரலில் படிந்துள்ள அழுக்குகளை அகற்ற மஞ்சள் பயனுள்ளதாக இருக்கும். தினமும் இரவில் தூங்கும் முன், ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து வாய் கொப்பளிக்கவும். இது நுரையீரலில் சேரும் நச்சுக்களை அகற்ற உதவுகிறது.

பீட்டா கரோட்டின் சத்து நிறைந்த உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்ள நுரையீரல் புற்றுநோய் ஆபத்திலிருந்து தப்ப உதவுகிறது என்கிறார்கள் சர்வதேச இம்யூனாலஜி விஞ்ஞானிகள். நுரையீரலை சுத்தம் செய்ய பீட்ரூட், ஆப்பிள், பூசணி விதைகள், மஞ்சள், தக்காளி, புளூபெர்ரி, க்ரீன் டீ, சிவப்பு முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

வாரத்திற்கு இருமுறை மூன்று வெள்ளைப் பூண்டை பச்சையாக உட்கொண்டால் நுரையீரல் புற்றுநோய்யை உறுதியாக தடுக்கலாம் என்கிறார்கள் சீன மருத்துவ ஆய்வாளர்கள். தக்காளியிலுள்ள ‘லைகோபின்’ எனும் ஆன்டி ஆக்ஸிடென்ட் புகைப்பிடிப்போரை நுரையீரல் புற்றுநோய் ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறது என்கிறார்கள் டோக்கியோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

பச்சை மிளகாயில் உள்ள, ‘கேப்சிகன்’ எனும் சத்து நுரையீரல் புற்றுநோய் செல்களை பரவ விடாமல் தடுக்கிறது என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர் அமெரிக்காவின் மார்ஷல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்,

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com