உடல் எடையை குறைக்க உதவும் தேங்காய் எண்ணெய்!

உடல் எடையை குறைக்க உதவும் தேங்காய் எண்ணெய்!
Published on

தேங்காய் எண்ணெய் கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்துக்கு நல்லது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், உடல் எடையைக் குறைக்க தேங்காய் எண்ணெய் உதவும் என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. உங்கள் உடல் எடை அதிகரித்தால் அதைப் பற்றி கவலைப்படாதீர்கள். சுத்தமான தேங்காய் எண்ணெய்யை சரியான முறையில் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய்யில் சமைக்கப்பட்ட உணவுகளில் சுவையும், மணமும் மட்டுமல்ல, ஆரோக்கியமும் நிறைந்திருக்கும். இது உடல் எடை அதிகரிப்பதை தடுக்கிறது. தேங்காய் எண்ணெய்யில் உள்ள டிரை கிளிசரைடு என்ற தனிமம் உணவில் இருக்கும் சத்துக் கூறுகளை பிரித்தெடுத்து, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெய்யில் மிகக் குறைந்த அளவிலேயே கொழுப்பு அமிலங்கள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இவை உணவில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. தேங்காய் எண்ணெய்யில் உள்ள சத்துக்கள் கல்லீரலைச் சென்றடைவதன் மூலம் அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது.

தினமும் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் கலப்படம் இல்லாத தேங்காய் எண்ணைய்யை குடித்து வந்தால் ஒரே மாதத்தில் மூன்று கிலோ வரை எடையைக் குறைக்க முடியுமாம். தேங்காய் எண்ணெய் உடலுக்குச் சென்றவுடன் செல்களுக்கு  ஊட்டமளிக்கின்றன. இதனால் கொழுப்பு ஆற்றலாக மாற்றப்படுகிறது. கெட்ட கொழுப்புகள் குவிந்து கிடப்பதால்தான் உடல் எடை கூடுகிறது. ஆனால், தேங்காய் எண்ணெய்யில் உள்ள டிரைகிளிசரைடு என்னும் கொழுப்பு மற்ற கொழுப்புகளை விட ஆரோக்கியமானது.

இதில் உள்ள கலோரிகள், கார்போஹைட்ரேட்டுகள் பசியைக் கட்டுப்படுத்தும். வாயு, மலச்சிக்கல், வயிற்றுப் பொருமல் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்களுக்கு தேங்காய் எண்ணெய் நல்ல பலனைக் கொடுக்கிறது.

காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறிவிடும். தேங்காய் எண்ணெய்யை தேனுடனும் கலந்து சாப்பிடலாம். தேங்காய் எண்ணெய்யில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com