Coconut oil Vs Almond oil: முடி வளர்ச்சிக்கு சிறந்த எண்ணெய் எது?

Coconut oil Vs Almond oil
Coconut oil Vs Almond oil
Published on

ண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி தங்களுடைய கூந்தல் நல்ல அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். தலைமுடி வளர்வதற்காக இயற்கையாக தேங்காயிலிருந்து கிடைக்கும் தேங்காய் எண்ணெய்யையே பெரும்பாலும் பயன்படுத்தியிருப்போம். எனினும், தற்போது பாதாம் எண்ணெய்யும் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவதாக சொல்லப்படுகிறது. இந்தப் பதிவில் இவ்விரண்டு எண்ணெய்யில் எது சிறந்தது என்பதைப் பற்றி காண்போம்.

பாதாம் எண்ணெய் பாதாம் விதையிலிருந்து எடுக்கப்படுகிறது. இதில் வைட்டமின் ஈ, flavonoids, mono unsaturated and poly unsaturated fatty acids ஆகியவை உள்ளன. இது தலைமுடி மிருதுவாக வளர்வதற்கும், சருமம் பளபளப்பாக இருப்பதற்கும் உதவுகிறது.

நன்றாக முற்றிய தேங்காயிலிருந்து தேங்காய் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதில் Saturated fats மற்றும் fatty acids அதிகமாக உள்ளன. இது தலைமுடியை உடையாமல், பாதிப்படையாமல் காக்கிறது.

பாதாம் எண்ணெய் அடர்த்தியாக இருப்பதால், சருமத்தில் உறிஞ்சிக்கொள்வது சிரமம். இதுவே தேங்காய் எண்ணெய் மிகவும் இலகுவாக இருப்பதால், சுலபமாக உச்சந்தலையில் தடவும் பொழுதே சருமம் உறிஞ்சிக்கொள்ளும்.

தூய்மையான பாதாம் எண்ணெய் எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. இதன் விலை மிகவும் அதிகமாகும். பாதாம் எண்ணெய் என்று விற்கப்படும் பெரும்பாலான எண்ணெய்கள் மினரல் ஆயிலுடன் கலந்து விற்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய்யை தயாரிப்பது எளிதானது. அதனால் இது எளிதாகவே கிடைக்கிறது. விலையும் மலிவாக இருப்பதால், மக்கள் தேங்காய் எண்ணெய்யை அதிகம் விரும்பி வாங்குகிறார்கள்.

பாதாம் எண்ணெய்யில் Unsaturated fatty acids அதிகம் உள்ளதால் மூன்று மாதத்திற்கு மேல் சேமித்து வைக்க முடியாது. அழுகிப்போன நாற்றம் ஏற்படும். இதுவே, தேங்காய் எண்ணெய் வெகுகாலம் கெட்டுப்போகாமல் இருக்கும் ஆற்றலுடையது.

பாதாம் எண்ணெய்யை தலைக்குத் தடவுவதால் கூந்தல் ஈரப்பதத்துடனும், பளபளப்பாகவும் இருக்கும். மேலும், தலை முடியை வலிமையாகவும், நீளமாக வளர்வதற்கும் உதவுகிறது. பொடுகுத் தொல்லையை சரிசெய்கிறது.

இதையும் படியுங்கள்:
வயிறு உப்புசத்தை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சரி செய்வது எப்படி?
Coconut oil Vs Almond oil

தேங்காய் எண்ணெய் முடியை மிருதுவாக ஆக்குகிறது. இதனால் தலை முடியை சீவி சிக்கெடுப்பது சுலபமாகிறது. தேங்காய் எண்ணெய் தடவுவதால், உச்சந்தலையில் உள்ள பொடுகுத் தொல்லை நீங்கும். தலை முடியை வலிமையாக்குவது மட்டுமில்லாமல், முடி கொட்டுவதும் இதனால் வெகுவாகக் குறைக்கிறது. நரைமுடி வராமல் கூந்தலைக் கருமையாக வைக்க உதவுகிறது.

எனவே, தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டுமே முடி வளர்ச்சிக்கு நன்றாக உதவினாலும் பாதாம் எண்ணெய் சற்று விலை அதிகமாகவும், சருமத்தில் உறுஞ்சுவதற்கு கடினமாகவும் இருக்கும். இதுவே, தேங்காய் எண்ணெய் விலையும் குறைவு, சருமத்தில் எளிதாக உறிஞ்சிக்கொள்ளும். ஆகவே, பாதாம் எண்ணையைக் காட்டிலும் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துவது மிகவும் சிறந்ததாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com