கருஞ்சீரகம் பங்ளாதேஷ், இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பயன்படுத்தக் கூடிய ஒரு உணவு பொருளாகும். இது கருப்பு நிறத்தை கொண்டிருக்கும். இதை உணவில் சுவைக்காகப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் கருஞ்சீரகத்தை ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே மருத்துவதிற்காக பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருஞ்சீரகத்தில் நார்ச்சத்து, அமினோ ஆசிட், இரும்புச்சத்து, சோடியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. கருஞ்சீரகத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி12, நையாசின், வைட்டமின் சி போன்றவை உள்ளன.
கருஞ்சீரகத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளதால், வீக்கத்தை குறைக்க உதவும், கேன்சர் வராமல் தடுக்கும் குணமுடையது. வைட்டமின் ஈ அதிகம் உள்ளதால் சருமத்திற்கு மிகவும் நல்லதாகும். மேலும், சருமத்தில் சுருக்கங்கள் வராமல் தடுக்கும்.
தினமும் கருஞ்சீரகம் சாப்பிடுவதால் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. தேனுடன் கருஞ்சீரகம் சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், அறிவுதிறன் அதிகரிக்கும். வயதானவர்களுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும். கருஞ்சீரகத்தை புதினாவுடன் சேர்த்து சாப்பிட்டால், அல்ஸிமர் வியாதியை குணப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருஞ்சீரகம் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. சக்கரை வியாதி உள்ளவர்கள் பிளேக் டீயில் கருஞ்சீரக எண்ணையை சேர்த்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கருஞ்சீரகம் இதயத்திற்கு மிகவும் நல்லதாகும். இதயத்தை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்வது மட்டுமில்லாமல், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதற்கும் உதவுகிறது.
கருஞ்சீரகம் உடலில் உள்ள வீக்கத்தை குறைக்க உதவுகிறது. இது நாள்பட்ட அலர்ஜியையும் போக்கக்கூடிய தன்மையை கொண்டது. மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது. கருஞ்சீரக எண்ணை தினமும் பயன்படுத்தினால் வீக்கம் விரைவில் குணமாகும் என்று ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
இரத்த கொதிப்பு அடிக்கடி வராமல் இருப்பதற்கு கருஞ்சீரக எண்ணையை ஒரு தேக்கரண்டி வெதுவெதுப்பான தண்ணீரில் சேர்த்து குடிக்கவும்.
பற்களை பாதுகாப்பது மட்டுமில்லாமல், ஈறுகளில் உண்டாகும் இரத்தப்போக்கு, பலவீனமான பற்கள் போன்றவற்றை சரிசெய்யும். அரை தேக்கரண்டி கருஞ்சீரக எண்ணையை ஒரு கப் தயிரிலே கலந்து பற்களிலும் ஈறுகளிலும் இருமுறை தடவுவதால் பற்கள் ஆரோக்கியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்துமாவை போக்குவதற்கும் கருஞ்சீரகம் பயன்படுகிறது. கருஞ்சீரக எண்ணையை தேனுடன் சேர்த்து சுடுநீரில் கலந்து அருந்துவதால் ஆஸ்துமா குணமாகும்.
கருஞ்சீரகத்தை சுடுநீரில் சேர்த்து அருந்துவதால் உடல் எடை குறையும் என்று கூறப்படுகிறது. கருஞ்சீரக எண்ணையுடன் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவுவதால் முகம் பளபளப்பாக காட்சி தரும். கருஞ்சீரகத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.
சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்னைகளைப் போக்கும். சிறுநீரக கற்களை குணப்படுத்தும். இது புற்றுநோயை குணப்படுத்தக் கூடியதாகும். மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கணைய புற்றுநோய் ஆகியவற்றை குணப்படுத்தும். கருஞ்சீரக எண்ணையை தலையில் தடவுவதால் தலைவலி குணமாகும். கருஞ்சீரக எண்ணெயில் கொலாஜன் உள்ளதால் இது சருமத்திற்கு நெகிழ்வுத்தன்மையை கொடுக்கும்.
கருஞ்சீரகத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதே அதிக பலனை தரும். மரணத்தை தவிர, எல்லா நோய்களையும் குணப்படுத்தும் கருஞ்சீரகம் என்று சொல்வதுண்டு. அதனால், கருஞ்சீரகத்தை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் பயனளிக்கக் கூடியதாகும்.