

கண்களில் ஏற்படும் குருட்டுத்தன்மை பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் கண்களில் உண்டாகும் இன்னொரு முக்கியமான குறைபாடான color blindness பற்றி அதிகம் பேருக்கு தெரியாது. அப்படி இந்த குறைபாடு இருப்பவர்களும் இதை எளிதில் அறிந்து கொள்வதில்லை. அதற்கென்று இருக்கும் சோதனைகளுக்கு கண்களை உட்படுத்தினால் மட்டுமே இதை கண்டுபிடிக்க முடிகிறது.
COLOUR BLINDNESS இல் மூன்று வகைகள் உள்ளன. முதலும் அதிகமாகவும் உண்டாகும் கலர் குருட்டுத்தன்மை சிவப்பு மற்றும் பச்சை வண்ணத்தை சார்ந்ததாகும். இந்த வகை குறைபாட்டினால் நமக்கு சிவப்புக்கும் பச்சைக்கும் வித்தியாசம் காண்பது கடினமாக இருக்கும் . சிவப்பு பச்சையாகவும் பச்சை சிவப்பாகவும் தோற்றமளிக்கும். இந்த குறைபாடு உள்ளவர்கள் வாகனம் - முக்கியமாக ரயில் - ஓட்டுபவராக இருந்தால் பயணிகள் கதி அதோகதிதான்.
இரண்டாவது வகை நீலம் மற்றும் மஞ்சள் பற்றியது. இந்த குறைபாடு உள்ளவர்கள் நீலத்துக்கும் மஞ்சளுக்கும் வித்தியாசம் காண முடியாமல் தவிப்பார்கள். நீலம் மஞ்சள் போலவும் மஞ்சள் நீலம் போலவும் ஜாலம் செய்யும்.
மூன்றாவது வகை மிகவும் மோசமானதாகும். இவ்வகை கலர் குருட்டுத்தன்மை இருந்தால் நம் கண்கள் எந்த வண்ணத்தையும் உணர முடியாது. இக்குறைபாடு மிகவும் கொடுமையானது. இதை 'நாய் கண் வியாதி' என்று சிலர் கூறுகிறார்கள். ஏன் என்றால் நாய்களுக்கு எந்த வித நிறமும் தெரியாது என்று கண்டு பிடித்துள்ளார்கள்.
இந்த குறைபாடு உள்ளவர்களுக்கு ஈஸ்ட்மென் கலர் திரைப்படம் கூட கருப்பு வெள்ளை படமாகத்தான் தெரியும். நல்லவேளையாக இவ்வகை குறைபாடு உள்ளவர்கள் உலகில் மிக மிக குறைவு. இந்த கண் வியாதிக்கு காரணங்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
மிகமுக்கிய காரணம் பரம்பரை. X குரொமொசொம் வழியாக பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்கு வருகிறது இந்த குறைபாடு. X குரொமொசொம் சம்பந்தப்பட்டதால் முக்கால்வாசி ஆண்களையே இது பாதிக்கிறது. சர்க்கரை நோய், glaucoma, multiple sclerosis, நோய்களாலும் அடிகளாலும் ஸ்ட்ரோக்கினால் கண்களுக்கும் மூளைக்கும் ஏற்படும் காயம் மற்றும் பாதிப்புகளாலும் கலர் குருட்டுத்தன்மை ஏற்படுவதாக கூறுகிறார்கள். ரத்த அழுத்தம், காசம் போன்ற நோய்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகளாலும் கண்கள் வண்ணங்களின் உணரும் தன்மை மிகவும் குறைய வாய்ப்பு உண்டு என்று கூறப்படுகிறது.
கடைசியாக 70 வயது தாண்டினாலே கண்களுக்கு நிறங்களை வேறுபடுத்தி அறியும் ஆற்றல் குறைந்து விடுகிறது என்பதும் ஒரு காரணமாக எடுத்து கொள்ளப்படுகிறது. இந்த குறைபாட்டை மருந்து கொடுத்தோ மருந்து கண்களில் போட்டோ அறுவை சிகிச்சை செய்தோ குணப்படுத்த முடியாத நிலை தான் இன்று வரையில். எதிர் காலத்தில் இது சாத்தியமாகலாம். இப்போதைக்கு சிலவகை கலர் கண்ணாடிகளை அணியும்படி சிபாரிசு செய்கிறரர்கள்.
இதில் என்ன வேடிக்கை என்றால் தலைமுறை தலைமுறையாக வயதாக ஆக கண்களின் தீட்சண்யம் அதாவது கூர்மை அதிகரிக்கும் என்ற அந்த காலத்து பேச்சாகும். இது சம்பந்தமாக ராமன் எத்தனை ராமனடி படத்தில் வரும் கவியரசு கண்ணதாசனின் கீழ்கண்ட பாடல் வரிகள்தான் ஞாபகத்திற்கு வருகிறது.