தயிர் சாதத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா? இது இத்தனை நாள் தெரியாம போச்சே! 

 curd rice
curd rice
Published on

தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான உணவுகளில் தயிர் சாதம் அதன் தனித்துவமான சுவைக்காக தனித்து நிற்கிறது. குறிப்பாக வெயில் காலங்களில் இந்த உணவு மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. தயிர் சாதம் வெறும் சாதாரண உணவு என நினைக்கும் பலருக்கு, அது நமக்கு எவ்வளவு நன்மை செய்கிறது என்பது பற்றி தெரிவதில்லை. இந்த பதிவில் தயிர் சாதம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம். 

1. ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது: தயிர் சாதத்தில் தயிர் மற்றும் சாதத்தின் அத்தனை ஊட்டச்சத்துகளும் நமக்கு கிடைக்கிறது. தயிரில் புரோட்டின், கால்சியம் நிறைந்திருப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் பலப்படுத்த உதவியாக இருக்கும். 

2. குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது: தயிர் சாதத்தில் ப்ரோ பயோடிக் நிறைந்துள்ளது. இதில் உள்ள சத்துக்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்கள் ஆரோக்கியமாக வளர உதவும். குறிப்பாக குளிர்காலத்தில் செரிமான அமைப்புக்கு தேவையான ஆதரவு தயிர் சாதத்தால் கிடைக்கிறது.

3. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: தயிர் சாதத்தில் விட்டமின் டி மற்றும் ப்ரோபயாட்டிக் பண்புகள் உள்ளது. இது நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இது மூலமாக பருவகால நோய்களை தடுத்து ஆரோக்கியமாக இருக்க முடியும்.  

4. எடையைக் குறைக்க உதவும்: நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பும் நபர் என்றால் தயிர் சாதம் உங்களுக்கு ஏற்ற உணவாகும். இது உங்களின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடையை நிர்வகிக்கும் புரதச்சத்துக்களைக் கொடுக்கிறது. மேலும் தயிர் சாதம் சாப்பிடுவதால் பசி குறைந்து அதிக உணவுகள் எடுத்துக் கொள்வது குறைகிறது. 

இதையும் படியுங்கள்:
இந்த 5 விஷயங்களை உங்கள் உறவினர்களிடம் தெரியாமல் கூட சொல்லி விடாதீர்கள்! 
 curd rice

5. உடலுக்கு குளிர்ச்சி தருகிறது: இதை எல்லா காலங்களிலும் மக்கள் விரும்பி சாப்பிட்டாலும், குளிர்காலங்களில் தயிரை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் தயிர் உடலுக்கு அதிக குளிர்ச்சி தரும் உணவாகும். வெயில் காலங்களில் சாப்பிட உகந்த உணவாக பார்க்கப்படுகிறது. மேலும் அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் தயிர் சாப்பிடுவது நல்லது. 

இப்படி பல ஆரோக்கிய நன்மைகளை தயிர் சாதம் நமக்கு கொடுக்கிறது. எனவே இந்த உணவை அவ்வப்போது சாப்பிட முயலங்கள். வாரம் மூன்று நாட்களாவது தயிர் சாதத்தை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com