நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமான எலும்புகள் அவசியமான ஒன்றாகும். குறிப்பாக பால் பொருட்களில் மட்டுமே அதிக கால்சியம் இருப்பதால், அதை உட்கொண்டால் தான் எலும்புகளின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என சொல்வார்கள். ஆனால் பால் அல்லாத சில உணவுகளிலும் எலும்பை திடப்படுத்தும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. பால் பொருட்களினால் ஏற்படும் லாக்டோஸ் அலர்ஜி உள்ளவர்கள் இந்த உணவை சாப்பிடுவதன் மூலமாக எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
தாவர பால் பொருட்கள்: இப்போதெல்லாம் அதிகப்படியாக தாவர பால் பொருட்கள் வந்துவிட்டன. காரணத்திற்கு பாதாம் பால், ஓட்ஸ் பால், சோயா பால் போன்ற தாவர அடிப்படைகளான பால்களில் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் விட்டமின் டி சத்து போன்றவை அதிகம் உள்ளது. நீங்கள் எடுத்துக் கொள்ளும் தாவர பால் வகைகளில் இனிப்பு அதிகம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
நட்ஸ் மற்றும் விதைகள்: சியா விதைகள், பாதாம் பால், ஆளி விதைகள் போன்றவற்றில் எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அவற்றில் மக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகளும் இருப்பதால், எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
கீரைகள்: பொதுவாகவே கீரை வகைகள் கால்சியம் சத்துக்களின் சிறந்த ஆதாரமாகும். அத்துடன் இதில் மெக்னீசியம், விட்டமின் கே போன்றவை நிறைந்திருப்பதால் புதிய எலும்புகளின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பதற்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதன் மூலமாக எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் பயன்பெறுவர்.
கொழுப்பு மீன்கள்: காணங்கெழுத்தி, மத்தி மற்றும் சாலமன் போன்ற மீன்களில் எலும்பின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. மேலும் இதில் அழற்ச்சி எதிர்ப்பு கொண்டு வரும் இருப்பதால் எலும்புகளுக்கு வலுவூட்டும். குறிப்பாக மீன்களில் விட்டமின் டி சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது உணவுகளிலிருந்து கால்சியம் சத்தை பிரித்தெடுக்க உதவுகிறது.