சிலந்தி கடி பற்றி அறியவேண்டிய அவசியத் தகவல்கள்!

What we need to know about spider bites.
What we need to know about spider bites.

சிலந்தி கடிப்பதால் ஏற்படும் கொப்புளங்கள் மற்றும் பாதிப்புகள் நமக்கு பயத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால், சிலந்தி கடிக்கு நாம் அந்த அளவுக்கு பயப்பட வேண்டியதில்லை. பெரும்பாலான சிலந்திகள் கடித்தால் அது கடும் பிரச்னையை ஏற்படுத்துவதில்லை.

ஒருசில குறிப்பிட்ட வகை சிலந்திக்கடி மட்டுமே நமக்கு வீக்கம், வலி போன்றவற்றை ஏற்படுத்தும். இது சிலந்தி கடித்தபோது செலுத்தப்பட்ட விஷத்தின் விளைவால் நடக்கிறது. ஒருவேளை உங்களை சிலந்தி கடித்து தீவிர பாதிப்பு இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். பெரிய வகை சிலந்திகளால் மட்டுமே மனிதர்களைக் கடித்து பாதிப்புகளை ஏற்படுத்த முடியும். சிறிய வகை சிலந்தியின் கொடுக்குகள் மனிதர்களின் சருமத்தில் ஊடுருவ முடியாத அளவுக்கு இருப்பதால், அவற்றால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.

இந்தியாவில் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் சிலந்திகள் அதிக அளவில் இல்லை. இருப்பினும், சில சிலந்திகள் கடித்தால் அதிக வலி, சிவந்து போதல், வீக்கம் போன்றவை ஏற்படலாம். இது மற்ற சில பூச்சிகள் கடிப்பது போலவே சருமத்தில் சிவப்பு, அரிப்பு மற்றும் வலி மிகுந்த கொப்புளங்களை ஏற்படுத்தும். ஒரு சிலந்தி உங்களைக் கடித்த பிறகு அதிகம் வியர்த்தல் காய்ச்சல், குளிர், குமட்டல், வலி போன்றவை ஏற்பட்டால் கட்டாயம் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

ஒருவரை சிலந்தி கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

சிலந்தி கடியை சாதாரணமாக நினைக்காமல் அதற்கான முதலுதவி செய்ய வேண்டியது அவசியம். ஆனால், பெரும்பாலான சிலந்தி கடிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை செய்யலாம்.

முதலில் கடிபட்ட இடத்தை வெதுவெதுப்பான நீர் மற்றும் சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

சிலந்தி கடித்து வீக்கமாக இருந்தால் அந்த இடத்தில் ஐஸ் பேக் போடலாம்.

அதிகப்படியான வலி இருந்தால், அதை எதிர்த்துப் போராட ஆன்ட்டி செப்டிக் க்ரீம் மற்றும் வலி நிவாரணிகளைப் பயன்படுத்தலாம்.

முடிந்தால் கடித்த பகுதியை ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை உப்பு நீர் கரைசலில் மூழ்க வையுங்கள்.

சிலந்தி கடியால் காயம் ஏற்பட்டு புண் ஆழமாக இருந்தால், உடனடியாக மருத்துவரின் உதவியை நாடுங்கள்.

சிலந்தி கடியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள, அவை அதிகம் வசிக்கும் பகுதிகளான கேரேஜ்கள், குப்பைகள், வீட்டின் அடித்தளம் போன்ற இடங்களில் கவனமாக இருங்கள். வீட்டிலிருந்து அவற்றை விரட்ட பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்தலாம். முடிந்தவரை வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். காடுகள், புதர்கள் போன்ற இடங்களுக்குச் செல்லும்போது கவனமாக இருங்கள். தோட்ட வேலைகள் செய்யும்போது பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் செயல்படுங்கள். இவற்றை முறையாக பின்பற்றினாலே சிலந்தி கடியிலிருந்து நாம் பாதுகாப்பாக இருக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com