நீங்க பிஸ்கட் அதிகம் சாப்பிடுவீங்களா? அச்சச்சோ! ஜாக்கிரதை! 

Eating Biscuits
Dangers of Eating Biscuits Every Day

பிஸ்கட் எல்லா வயதினரும் விரும்பி உண்ணும் ஒரு பிரபலமான ஸ்னாக்ஸ் வகையாகும். இது தற்போது எல்லா சுவைகளிலும் வருகின்றன. பெரும்பாலும், டீ காபி குடிக்கும்போது பிஸ்கட்டுகள் உட்கொள்ளப்படுகின்றன. எப்போதாவது பிஸ்கட் சாப்பிடுவது தவறில்லை என்றாலும், தினசரி பிஸ்கட்களை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல ஆபத்துகளை ஏற்படுத்தலாம். இந்த பதிவில் தினசரி பிஸ்கட் சாப்பிடுவதால் ஏற்படும் அபாயங்கள் பற்றி பார்க்கலாம். 

பெரும்பாலான பிஸ்கட்டுகளில் இருப்பது சர்க்கரை, கொழுப்பு மற்றும் மைதா மாவுதான். இதில் சர்க்கரையின் அளவே அதிகமாக இருக்கும். சர்க்கரை அதிகமுடைய பிஸ்கட்டை தினசரி உட்கொள்வதால் எடை அதிகரிப்பு, பல் சிதைவு மற்றும் நீரிழிவு போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. 

பிஸ்கட்டில் பெரும்பாலும் டிரான்ஸ்பேட் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் போன்ற ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உள்ளன. இந்த கொழுப்புகள் உங்கள் கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தி இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். குறிப்பாக ட்ரான்ஸ்போர்ட் இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக சொல்லப்படுவதால், தினசரி பிஸ்கட் உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள். 

பிஸ்கட்டில் விட்டமின்கள் தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் அளவு குறைவாகவே இருக்கும். எனவே தினசரி அதிகமாக பிஸ்கட்களை உட்கொள்வது ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் எதிர்மறையாக பாதிக்கலாம். எனவே பிஸ்கட்டுகளை குறைத்துக்கொண்டு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்படியான சீரான உணவை உட்கொள்வது முக்கியம்.

பல பிஸ்கட்டுகள் பதப்படுத்தப்பட்ட பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக மைதா மாவு, செயற்கை வண்ணங்கள் மற்றும் சுவையூட்டிகள் போன்றவை அதிகம் சேர்க்கப்படுவதால், உங்களுக்கு செரிமானம் பாதிக்கப்பட்டு வீக்கம், வாயு மற்றும் அசௌகரியம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். 

இதையும் படியுங்கள்:
உடலில் உள்ள யூரிக் அமில அளவை இயற்கையாகக் குறைக்கும் வழிகள்! 
Eating Biscuits

பிஸ்கட்டுகளை தினசரி அதிகமாக உட்கொள்பவர்கள் தங்களின் எடையை நிர்வகிப்பது கடினம். அதிக கலோரி மற்றும் குறைந்த ஊட்டச்சத்து உள்ளடக்கம் காரணமாக பிஸ்கட் நீண்ட காலத்திற்கு முழுமையான உணர்வைக் கொடுக்காது. இதனால் அதிகமாக உணவு உட்கொண்டு எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். 

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிக்க பிஸ்கட் சாப்பிடுவதைக் கட்டுப்படுத்தி, ஆரோக்கியமான மாற்று உணவுகளைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். எனவே, உங்கள் உணவில் தினசரி அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பழங்கள் காய்கறிகள் நட்ஸ் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com