சர்க்கரை: இது உணவல்ல விஷம்! 

Dangers of Sugar
Dangers of Sugar
Published on

நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் சர்க்கரை நமக்கு நல்ல சுவையைத் தருவது மட்டுமின்றி, பல ஆபத்துகளையும் விளைவிக்கக் கூடியது. அதிக அளவு சர்க்கரை உட்கொள்வது நீரிழிவு, உடல் பருமன், பல் சிதைவு போன்ற பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். சர்க்கரை என்பது ஒரு வகையான கார்போஹைட்ரேட் ஆகும். இது இயற்கையாக பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் போன்ற உணவுகளில் காணப்படுகிறது. மேலும் சர்க்கரை கரும்பு, பீட்ரூட் போன்றவற்றில் இருந்து சுத்திகரிக்கப்பட்டு வெள்ளை சர்க்கரையாகவும் கிடைக்கிறது. 

அதிக சர்க்கரை உட்கொள்ளதால் ஏற்படும் தீமைகள்: 

அதிக வெள்ளை சர்க்கரை உட்கொள்வது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்து நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும். மேலும், சர்க்கரை நிரம்பிய உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் உடலில் கலோரி அதிகமாகி உடல் எடை அதிகரிப்பு மற்றும் உடற்பருமன் ஏற்படலாம். 

சர்க்கரையானது பல்லில் உள்ள பாக்டீரியாக்களுக்கு உணவாகி பற்களில் அதிக அமிலத்தை உருவாக்குகிறது. இதனால் பல் சிதைவு மற்றும் ஈறு நோய்களுக்கு வழிவகுக்கும். இதன் அதிக கலோரி உள்ளடக்கம் காரணமாக கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்து நல்ல கொழுப்பின் அளவைக் குறைக்கலாம். இதன் காரணமாக இதய நோய்க்கான அபாயம் அதிகரிக்கும். 

அதிக சர்க்கரை உட்கொள்வது கல்லீரலில் கொழுப்பு படிவதை ஊக்குவித்து கல்லீரலை பாதிப்படையச் செய்யும். மேலும் சில ஆய்வுகளில் அதிக சர்க்கரை உட்கொள்வது குடல் புற்றுநோய்க்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 

எனவே அதிக சர்க்கரை கலந்த உணவுகள் மற்றும் பானங்களை உணவாக எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக இயற்கையான சர்க்கரை உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடலாம். இதில் சர்க்கரையுடன் சேர்ந்து நார்ச்சத்து, விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருப்பதால், உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும். 

ஒரு நாளைக்கு எவ்வளவு சர்க்கரை உட்கொள்ளலாம்? 

உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒரு நாளைக்கு ஒரு நபர் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவு, அவரது மொத்த கலோரியில் 10 சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் என பரிந்துரைக்கிறது. அதாவது ஒரு நபர் ஒரு நாளைக்கு 2000 கலோரி உணவு உட்கொள்பவர் என்றால், அவர் அதிகபட்சமாக 20 கிராம் சர்க்கரை மட்டுமே உட்கொள்ள வேண்டும். இதற்கு மேல் சாப்பிடுவது, அவரது உடலில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம். 

இதையும் படியுங்கள்:
ஆந்திரா உளுந்து லட்டு: சுவையான பாரம்பரிய இனிப்பு செய்முறை! 
Dangers of Sugar

நீங்கள் ஒரு இனிப்பு விரும்பி என்றால், அடுத்த முறை அதிகமாக இனிப்பு வகைகளை சாப்பிடும்போது அதனால் ஏற்படும் உடல் பாதிப்புகளையும் சற்று நினைத்துப் பாருங்கள். சர்க்கரை உணவுகளை நன்கு சுவைத்து உண்டு மகிழும் அதே வேளையில், நமது ஆரோக்கியத்திலும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். இதை நீங்கள் புரிந்து கொண்டாலே உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்ட ஆரம்பித்து விடுவீர்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com