இரத்தச் சர்க்கரையைக் குறைக்கும் பேரீச்சம்பழக்கொட்டை பவுடர்!

பேரீச்சை கொட்டை பவுடர்
பேரீச்சை கொட்டை பவுடர்

பேரீச்சம் பழத்தின் நன்மைகளை நாம் அறிவோம். ஆனால் பேரீச்சம்பழக் கொட்டை பவுடரின் நன்மைகள் பற்றித் தெரியுமா.?

சரும ஆரோக்கியத்தில் பேரீச்சை கொட்டை பவுடர் முக்கிய பங்கு ஆற்றுகிறது. முகம் சுருக்கங்களைப் போக்குகிறது. இக்கொட்டையிலிருந்து எடுக்கப்படும் எண்ணையில் வைட்டமின் பி, எ   மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளதால் தோல் ஆரோக்கியத்திற்குச் சிறந்தது. இதில் ஆன்டி ஆக்சிடண்டும் உள்ளதால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தீர்க்கிறது.

இது காயங்களை ஆற்றக்கூடியது. இக்கொட்டைகளை சூடு செய்து ஆறிய பிறகு புண்கள் காயங்கள் மீது வைக்க அவை விரைவில் குணமாகும். 

பேரீச்சம் பழக்கொட்டை சிறுநீரகக் கற்களை நீக்கக்கூடியது. இக் கொட்டையை தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்துக் காலை மாலை என இரண்டு வேளை அருந்திவர சிறுநீரககற்கள் கரையும்.

நக வளர்ச்சிக்கு இக்கொட்டையின் எண்ணை உறுதுணையாக இருக்கிறது.

கர்ப்பிணிப் பேர்களுக்கு நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அதிக அளவில் பால் சுரக்கவும் இக் கொட்டையின்  பௌடர் உதவுகிறது.

இதில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது. பேரீச்சை எண்ணை கொண்டு முடியை மசாஜ் செய்ய முடி அடர்த்தியாக வளரும்.

இந்த பவுடரை பற்களில் தேய்க்க பற்களின் புண்கள் ஆறும்.

இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. வயிற்றுப் போக்கு உள்ளவர்கள்  இக்கொட்டை பவுடரை சாப்பிட குணமாகும்.

கொள்ளைப் பயன்கள் நிறைந்த கொழிஞ்சிப்பழம்!

து நீரிழிவு நோய்க்கு மிகச்சிறந்தது. மேலும் இரத்த நாளங்களில் அடைப்பை நீக்குகின்றன. 

எலுமிச்சை குடும்பத்தைச் சேர்ந்த இது ஆயுர்வேதத்தில் பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. 

கொழிஞ்சிப்பழம்
கொழிஞ்சிப்பழம்

இதன் நன்மைகள்:

இப்பழத்தில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆக்சிஜனேற்றப் பண்புகள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இரைப்பை மற்றும் குடல் நோயையும் குணப்படுத்தும்.

ரத்தம் தொடர்பான வியாதிகள் உள்ளவர்கள் கொழிஞ்சிப் பழத்தை பயன்படுத்துவது மிக அவசியம். இதில் உள்ள அமிலக் கலவைகள் இரத்தத்தை சுத்தம் செய்கின்றன. 

நரம்பியல் கோளாறுகள் மற்றும் பதட்டம் போன்றவை குணமாக கொழிஞ்சி எண்ணை பயன்படுத்தலாம்.

கொழிஞ்சிச் சாற்றில் உள்ள அமிலங்கள் உடலின் நச்சுக்களை குறைத்து செல்கள் சிதைவடைவதைத் தடுக்கும். சரும வெடிப்பு  முகப்பருக்கள் போன்றவை தடுக்கப்படுகின்றன.

கொழிஞ்சி இலைகளை ஈறுகளில் தேய்ப்பது வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

இதன் இலைகள் ஒற்றைத் தலைவலியை நீக்கக் கூடியதாகும்.

ஜீரண மண்டலத்தை சீராக்கும் அழற்சி எதிர் பண்புகள் இதில் உள்ளன. மூலநோய், மலக்குடல் புற்றுநோய் மற்றும் அல்சர் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

இதில் உள்ள சிட்ரோனெல்லோல். பூச்சிக் கடியை குணப்படுத்தும்.

இதன் சாற்றைத் தலையில் தேய்ப்பது முடி உதிர்வை தன் தடுக்கும். மேலும் இது சருமத்தை ஈரப்பதமாக்கவும் பொடுகை விரட்டவும் பயன்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com