உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும் Detox முறை! 

Detox method to reduce your stress.
Detox method to reduce your stress.

இன்றைய காலத்தில் நல்ல விஷயங்களை சொன்னால் யாரும் கேட்பதே கிடையாது. அதனால் பல தருணங்களில் அதிக மன அழுத்தத்தை உணர்கின்றனர். வாழ்க்கையில் முக்கியமாக செய்ய வேண்டிய வேலைகளை செய்யாமல் இருப்பது, அதிக கோபமடைவது, வீடு மற்றும் குடும்பம் போன்ற இடங்களில் அழுத்தம் காரணமாக பலருக்கு மன சோர்வு அதிகரிக்கிறது. இதுபோன்ற தருணங்களில் மூளையை லேசாக்கும் வழிமுறைகளை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் மன அழுத்தம் கொஞ்சமாவது குறையும். 

Detox என்பது தேவையில்லாத விஷயங்களை நீக்குவதாகும். எனவே இந்த பதிவு வாயிலாக, உங்கள் வாழ்க்கையில் தேவையில்லாததாக இருக்கும் மன அழுத்தத்தை எப்படி நீக்குவது எனப் பார்க்கலாம்.

நீங்கள் அதிகமாக மன அழுத்தத்தை உணரும்போது, அதீத சிந்தனைகள் காரணமாக மன அழுத்தம் மேலும் அதிகரிக்கும். இத்தகைய சூழலில் உங்கள் மனதை மாற்றி ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம். தேவையற்ற விஷயங்களை அதிகம் சிந்தித்தால் எதிர்மறை எண்ணங்களே தோன்றும். எனவே மனதை திசைத் திருப்பும் வேலைகளில் ஈடுபட்டு, கொஞ்சம் ஓய்வு எடுக்க முயலுங்கள்.

அடுத்ததாக எதைப் பற்றியும் பெரிதாக சிந்திக்காமல் அமைதியான சூழலில் தியானம் செய்யுங்கள். இது உங்கள் மனதில் நேர்மறையான எண்ணத்தைத் தூண்டி, மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். தொடர்ச்சியாக தியானம் செய்வது மூலமாக செரட்டோனின் ஹார்மோன் உற்பத்தியாகி மனநிலையை மேம்படுத்தும். 

இதையும் படியுங்கள்:
உங்களுக்கு சளி பிடித்தாலும் இந்த 6 பழங்களை தாராளமாக சாப்பிடலாம்! 
Detox method to reduce your stress.

மன அழுத்தத்திலிருந்து விடுபட நீங்கள் இனிமையான இசையைக் கேட்கலாம். இது மனதிற்கு ஒரு தளர்வைக் கொடுத்து அமைதியை உணர வைக்கும். இதன் மூலமாக பாடலைக் கேட்டு முடித்ததும் நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளில் ஈடுபாட்டுடன் செயல்பட முடியும். எனவே மன அழுத்தத்தில் இருந்து விடுபட உங்களுக்குப் பிடித்த பாடல்களைக் கேளுங்கள்.

தினசரி ஏதாவது உடற்பயிற்சி செய்தாலே நமது உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். தினசரி உடற்பயிற்சி செய்யும்போது உடலுக்கும், மனதுக்கும் நேர்மறையான விளைவுகளை அது ஏற்படுத்துகிறது. எனவே நீங்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி என்றதும் நீங்கள் கஷ்டப்பட்டு எடையைத் தூக்க வேண்டும் என்ற அவசியமில்லை. லேசாக நடைப்பயிற்சி அல்லது ஓட்டப்பயிற்சி செய்வதும் உங்களுக்கு நல்ல உணர்வைக் கொடுக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com