சர்க்கரை நோயாளிகள் உண்ண உகந்த கிழங்குகள்!

Sarkkaraivalli kizhangu
Sarkkaraivalli kizhanguhttps://www.sharecare.com

நீரிழிவு நோயாளிகளை பெரும்பாலும் கிழங்குகள் சாப்பிடக்கூடாது என்பார்கள். உண்மையை சொல்லப்போனால் எல்லா கிழங்குகளுமே கெடுதல் கிடையாது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய கிழங்குகளும் சில உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

முதலில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு இதில் மிக முக்கியமானதாகும். பெயரைக் கேட்டதுமே சாப்பிடாமல் ஒதுக்கியும் விடுகிறோம். ஆனால், இந்தக் கிழங்கில், தித்திப்பு சுவை தரும் மாவுப்பொருள் மட்டுமல்ல, வைட்டமின் A, D, C, பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இதிலுள்ள B6 வைட்டமின், செரிமான கோளாறுகளை சீர் செய்கிறது. கோடைக் காலத்தில் அவசியம் உண்ண வேண்டிய கிழக்கு சர்க்கரை வள்ளிக்கிழக்கு. இதிலுள்ள அதிகப்படியான பீட்டா கரேட்டீன், வைட்டமின் சி மற்றும் மாங்கனீசு, செம்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ் அதனை தவிர்த்து வைட்டமின் பி1, பி2, கோடை வெயிலை சமாளிக்க உதவும் இதிலுள்ள வைட்டமின் D, நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக பராமரிக்க உதவுகிறது. அத்துடன் எலும்புகளும் வலுவாகின்றன. தைராய்டு சுரப்பி, பற்கள், நரம்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

இந்தக் கிழங்கில் இனிப்பு நிறைந்திருந்தாலும், அது இயற்கையானது. எனவே, இரத்த சர்க்கரை அளவில் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்துவதால், இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க விரும்புவோருக்கு இந்த கிழங்கு சிறந்த தேர்வாகவும் அமைகிறது.

கருணை கிழங்கானது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது. மண்ணீரல், கல்லீரலுக்கு இது வலு சேர்க்கிறது. அடிக்கடி இதை சாப்பிட்டால் உடலில் உஷ்ணம் ஏறாது. வாரத்தில் மூன்று நாட்கள் இந்தக் கிழங்கை சாப்பிட மலக்குடல் பகுதியில் வரும் புண்களை ஆற்றுகிறது. 40 நாட்களில் உள்மூலம், வெளிமூலம் சரியாகிறது. கருணைக் கிழங்கை புளி சேர்த்தே சமைக்க வேண்டும். காபி பிரியர்களின் பித்தக் கோளாறுகளை இது சரி செய்கிறது. அனைத்து மாதவிடாய் பிரச்னைகள் சரியாகும். இது கொழுப்புச் சத்தை கரைக்கக் கூடியது. இரத்த ஓட்டத்தை சமன்படுத்துகிறது. சர்க்கரை நோய்க்கும் மருந்தாகிறது.

கிழங்கு வகைகளுள் நீண்டகாலம் வைத்திருந்து பயன்படுத்தக் கூடியது சேனைக்கிழங்கு. ஸ்டார்ச் அதிகம் உள்ள இந்தக் கிழங்கு, ஈரம் நிறைந்த வெப்பப் பகுதிகளில் விளைவது குறிப்பிடத்தக்கது. ஆறு முதல் எட்டு மாதங்கள் வரை சேனைக்கிழங்கு கெட்டுப்போகாது என்பது இதன் சிறப்பம்சம் ஆகும். சேனைக்கிழங்கில் குர்செடின் எனப்படும் வேதிப்பொருள் உள்ளது. இது, கல்லீரல் செயல்பாடுகளை பாதுகாப்பதில் பயனுள்ளதாக இருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. கிழங்கு வகைகளிலேயே சர்க்கரை நோயாளிகளுக்கு பெஸ்ட் இந்த சேனைக்கிழங்குதான். காரணம், மிக மிகக்குறைந்த கிளைசெமிக் குறியீடு, கிளைசெமிக் லோடு கொண்டது இந்த சேனைக்கிழங்கு.

சேப்பக்கிழங்கில் 4 வகை இருந்தாலும் பயன்தரக்கூடிய விதத்தில் எல்லாமே ஒன்று தான். வைட்டமின் ஏ, பி, இரும்பு, புரதச்சத்துகள் இதில் அடங்கியுள்ளது. ஆண்மைக் குறைபாடை போக்க வல்லது. நரம்புத் தளர்ச்சியையும் நீக்கும். உடல் சூடு தணியும். சேப்பக்கிழங்கில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது. அதேபோல, ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற சத்துக்களும் உள்ளன. இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. புற்றுநோய் மற்றும் இதய நோய்க்கான அபாயத்தைக் குறைக்கிறது. எப்பவும் சேப்பக்கிழங்கு மசியல், சேப்பக்கிழங்கு பொறியல் மற்றும் சேப்பக்கிழங்கு புளிக்கூட்டு குழம்பு என்று வெவ்வேறு வகைகளில் எடுத்துக் கொள்ளலாம்.

பனங்கிழங்கு சாப்பிட சுவையானது. இது மலச்சிக்கலை போக்கி பசியை ஏற்படுத்தும். மேக நோயை போக்கும் சக்தியும் இதற்குண்டு. குடலுக்கு வலிமை தரும். உடலும் பலம் பெறும். பாதாமுக்கு இணையான சத்துக்கள் உள்ளதென்றால் அது இந்தப் பனங்கிழங்கில்தான். 100 கிராம் பனங்கிழங்கில் 87 கிலோ கலோரிகள் இருக்கிறதாம். இது நார்ச்சத்து நிறைந்தது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்தக்கூடியது. பனங்கிழங்கில் உள்ள சில சத்துக்கள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கவும் செய்கிறது. அதனால், சர்க்கரை நோயாளிகள் எப்போதாவது, மிகக் குறைவான அளவில் இந்த கிழங்கை சாப்பிடலாம்.

இதையும் படியுங்கள்:
மாமியார் - மருமகள் இடையே உற்சாகம் தரும் 3 உந்து சக்திகள்!
Sarkkaraivalli kizhangu

கேரட், பீட்ரூட் இரண்டையுமே சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கக் கூடாது. இந்த இரண்டிலுமே கிளைசெமிக் குறியீடு இருந்தாலும், கிளைசெமிக் லோடு இதில் மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, அடிக்கடி இந்தக் கிழங்குகளை சமையலில் சேர்த்துக்கொள்ளலாம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பலன் தரக்கூடியது முள்ளங்கி கிழங்குகள். முள்ளங்கியின் கீரையும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. இந்தக் கீரையிலிருந்து சாறு எடுத்து, வெந்தயத்தை ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலை மாலை 2 வேளையும் சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் குணமாகுமாம். அந்த வகையில் சிறுநீரகம் சீராக செயல்பட பேருதவி புரிகிறது.

அதற்காக மற்ற கிழங்குகளை அதிகமாக சாப்பிடவும் கூடாது. மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று, குறிப்பிட்ட அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவும் எண்ணெய்யில் வறுக்காமல், பொரிக்காமல், மிதமான அளவில் குழம்பு, கூட்டு, பொரியலாக சாப்பிடலாம். அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே நஞ்சுதானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com