நீங்கள் பால் மற்றும் பால் பொருட்களை அதிகம் உண்பவரா? அச்சச்சோ ஜாக்கிரதை!

பால் மற்றும் பால் பொருட்கள்
பால் மற்றும் பால் பொருட்கள்https://www.bruker.com
Published on

நாம் உண்ணும் உணவு எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருந்தாலும் அதை அளவோடு உண்ணும்போதுதான் அதிலுள்ள நற்பயன்கள் முழுவதுமாக உடலுக்குக் கிடைக்கும். அதன் சுவைக்காகவும் சத்துக்களுக்காகவும் அதிகளவில் உண்ணும்போது அது எதிர்வினை புரிவதாகி உடல் நலக் கோளாறுகளை உண்டுபண்ணும். பால் மற்றும் பால் பொருட்களை அதிகளவில் உட்கொள்ளும்போது என்னென்ன விளைவுகள் உண்டாகும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

சீஸ் போன்ற சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை அளவின்றி உண்ணும்போது வயிறு வீக்கம், வாய்வு, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள்  வருவதற்கான வாய்ப்பு அதிகம். குறிப்பாக லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவர்களுக்கு பாதிப்பு அதிகமாகும்.

சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகமுள்ள வெண்ணெய், சீஸ், முழுமையாகக் கொழுப்பு நிறைந்த பால் போன்ற உணவுகளை அதிகம் உண்ணும்போது இதய நோய் வரக் காரணமாகும் LDL என்ற கெட்ட கொழுப்பு உடலில் அதிகரிக்கும்.

ஐஸ்கிரீம், முழுமையான கொழுப்பு நிறைந்த கிரீம், வெண்ணெய், சில வகை சீஸ் போன்ற பால் பொருட்களில் கொழுப்புச் சத்தும் கலோரி அளவும் அதிகம். இவற்றை அதிகம் உட்கொண்டால் உடல் எடை அதிகரிக்கும்.

அதிகளவு பால் பொருட்கள் உண்பது சரும ஆரோக்கியத்திலும் பாதிப்பை உண்டுபண்ணி பருக்கள் தோன்றவும் காரணமாகிறது. மேலும், உடலின் இன்சுலின் அளவை அதிகரிக்கவும், ஹார்மோன் சுரப்பில் ஏற்றத்தாழ்வை உண்டுபண்ணவும் செய்யும்.

இதையும் படியுங்கள்:
மாரடைப்பில் இருந்து தப்பிக்க மகத்தான யோசனைகள்!
பால் மற்றும் பால் பொருட்கள்

பால் பொருட்களில் உள்ள அதிகளவு கால்சியம் உடலில் சேரும்போது அது சிறுநீர் மூலம் உடலிலிருந்து வெளியேற்றப்படுகிறது. நாளடைவில் இது எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பலவீனமடையச் செய்யும்.

‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்ற பழமொழியைப் பின்பற்றி எவ்வளவு சுவையுள்ளதாயினும் அதை அளவோடு உட்கொண்டு ஆரோக்கியம் காப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com