பூண்டு, வெங்காயம் உரிப்பதால் ஏற்படும் சரும அலர்ஜி பற்றி தெரியுமா?

பூண்டு, வெங்காயம் உரிப்பதால் ஏற்படும் சரும அலர்ஜி பற்றி தெரியுமா?

ந்திய சமையலில், குறிப்பாக தமிழ்நாட்டு சமையலில் பூண்டு, வெங்காயம் இல்லாத உணவு வகைகள் மிகவும் குறைவு. பெண்கள் காலம் காலமாக அடுப்படியில் வெங்காயமும் பூண்டும் உரித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். கண்கள் எரிந்தாலும், கண்ணீர் வந்தாலும் அதைத் தாங்கிக்கொண்டு பொறுமையாக வெங்காயம் உரிப்பார்கள்.

சிலருக்கு வெங்காயம், பூண்டு வாசனை பிடிக்காது. அவை சாத்வீக உணவில்லை என்று ஒதுக்குபவர்களும் உண்டு. வெங்காயம், பூண்டு இரண்டும் மிகச் சிறந்த உணவுகள். நோய் எதிர்ப்பு சக்திகள் நிறைந்தவை. தினமும் பூண்டு சாப்பிட்டால் இரத்த அழுத்தம் மட்டுப்படும். புற்றுநோயைத் தடுக்கும். கிராமங்களில் பல் வலி வந்தவர்களுக்கு பூண்டை நசுக்கி அதன் சாறை பல்லில் தேய்த்து வலியைப்  போக்குவர். லேசான காயங்களுக்குக் கூட பூண்டை அரைத்துப் பூசும் வழக்கம் உண்டு. ஆனால், மிக சிலருக்கு வெங்காயம், பூண்டு சாப்பிட்டால் உடலில் சில பிரச்னைகளை தோற்றுவிக்கும். வாய் எரிச்சல், வாயை சுற்றிலும் வீக்கம், வயிற்று வலி, வாந்தி வருவது போன்ற உணர்வு, கிறுகிறுப்பு முதலிய அறிகுறிகள் தென்படும். நெஞ்செரிச்சல் அல்சர் போன்ற வியாதிகளைக்கூடத் தரும்.

நிறைய வெங்காயம், பூண்டு உரிக்கும்போது கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரல் நகங்களில் வலி ஏற்படுவது சகஜமான விஷயம். ஆனால், சிலருக்கு அவற்றை உரித்தாலே சரும அலர்ஜி ஏற்படும் என்பது அசாதாரணமான ஒன்றுதானே? அவர்களின் கட்டை விரல், ஆட்காட்டி விரல், நடுவிரல் மூன்றும் பாதிக்கப்படும். சருமத்தில் தோல் உரிந்து எரிச்சலும் வீக்கமும் தோன்றும். மேல் தோலே உரிந்து போகும். வெகு சிலருக்கு கொப்புளங்கள் கூட வரக்கூடும். இதற்கு என்ன காரணம்?

பூண்டில் அல்லிசன் என்கிற அமினோ அமிலம் உள்ளது. பூண்டின் தோலை உரித்து நறுக்கும்போது அதிலிருந்து வெளிப்படும், அமினோ அமிலம் கைகளை காயமாக்குகிறது. சருமத்தில் எரிச்சலும் ஏற்படுகிறது. எப்போதும் ஈரக் கைகளால் பூண்டு உரிக்கக் கூடாது.

இது பெரும்பாலும் சமையல்காரர்கள், செப் போன்றவர்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்துகிறது. இவர்கள் கையில் கையுறை அணிந்து கொண்டு பூண்டு நறுக்கினாலும் தோலில் பாதிப்பு ஏற்படவே செய்கிறது என்பகு குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com