காளான் உணவால் ஏற்படும் கணக்கற்ற நன்மைகள் பற்றி தெரியுமா?

அக்டோபர் 15, தேசிய காளான் தினம்
Mushroom food
Mushroom food
Published on

காளான்கள் சிறிய பூஞ்சை உணவுகள் என்றாலும் இவற்றில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. உலகெங்கிலும் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான காளான்கள் வளர்கின்றன. காளான்களை உண்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

காளான்களின் நன்மைகள்: காளான்கள் அவற்றின் ஊட்டச்சத்து உள்ளடக்கம் மற்றும் பயோ ஆக்டிவ் கலவைகள் காரணமாக பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு வழங்குகின்றன. காளான்கள் வளர ஒளி தேவையில்லை மற்றும் இருட்டில் வளரும் திறன் கொண்டவை என்றாலும், அவை வளரும் செயல்பாட்டின்போது புற ஊதா ஒளியில் வெளிப்படும்போது அவை வைட்டமின் டி உற்பத்தி செய்கின்றன.

ஊட்டச்சத்து: காளான்களில் பி வைட்டமின்கள் நிறைந்துள்ளன. மேலும், இவற்றில் செலினியம் பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் தாமிரம் போன்ற தாதுக்கள் உள்ளன. இவற்றில் கலோரிகள் குறைவாக இருக்கின்றன. ஆனால், நார்ச்சத்து அதிகம்.

நோய் எதிர்ப்பு சக்தி: காளான்களில் நோய் எதிர்ப்பு உயிரணுக்களின் உற்பத்தியை தூண்டும் திறன் உள்ளது. மக்கள் காளான்களை சாப்பிடும்போது, மைக்ரோபேஜ்கள் தூண்டப்படுகின்றன. இது பல்வேறு நோய்களுக்கு எளிதில் பாதிக்கப்படுவதைக் குறைக்க உதவுகிறது. எனவே, நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது. இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நோய் வருவது குறையும்.

இதய ஆரோக்கியம்: காளான்களில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த நிறைவுற்ற கொழுப்பு காரணமாக கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. இதனால் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியமும் மேம்படுகிறது.

எடை மேலாண்மை: குறைந்த கலோரிகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் காளான்கள் முழுமை உணர்வுகளை ஊக்குவிக்கும். எடை மேலாண்மைக்கும் உதவும்.

எலும்பு ஆரோக்கியம்: சில வகையான காளான்களில் வைட்டமின் டி நிறைந்துள்ளது. இது எலும்பு ஆரோக்கியத்திற்கும் உடல் கால்சியம் சத்தை உறிஞ்சுவதற்கும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

குடல் ஆரோக்கியம்: அதிக நார்ச்சத்து உள்ளதால் உடலில் ஆரோக்கியமான செரிமானத்தை ஆதரிக்கிறது. இதனால் குடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கிறது.

புற்றுநோய் தடுப்பு: சில வகை காளான்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் காரணமாக புற்றுநோயை எதிர்த்து போராடும் பண்புகளைக் கொண்டிருக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
Waxing Vs Hair removal cream: சருமத்திற்கு சிறந்த சாய்ஸ் எது தெரியுமா?
Mushroom food

இரத்த சர்க்கரை கட்டுப்பாடு: காளான்களை அடிக்கடி உணவில் சேர்த்து வரும்போது அவை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். இன்சுலின் உணர்கிறனை மேம்படுத்தவும் வழி வகை செய்யும்.

மனநிலை மற்றும் அறிவாற்றல் நன்மைகள்: காளான்களில் உள்ள சத்துகள், பி வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் மூளை ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன. இவை ஆரோக்கியமான மனநிலை மேம்பாட்டிற்கும் வழி வகுக்கிறது. இவற்றை தொடர்ந்து உண்டு வருபவர்களின் மனநிலை எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.

அழற்சி எதிர்ப்பு விளைவுகள்: காளான்களில் காணப்படும் கலவைகள் அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளன. எனவே அவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கின்றன.

பீட்டா குளூக்கன்களின் ஆதாரம்: காளான்களில் பீட்டா குளுக்கன்கள் நிறைந்துள்ளன. இந்த சிக்கலான சர்க்கரைகள் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கவும் கொழுப்பின் அளவை குறைக்கவும் உதவுகின்றன.

காளான்கள் உடலுக்கு பலவித நன்மைகளைத் தந்தாலும் உண்ணக்கூடிய வகையான காளான்களை தேர்ந்தெடுத்து சமைத்து உண்ண வேண்டும். யாருக்காவது இவற்றை சாப்பிடும்போது ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசிப்பது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com