‘மகோய்’ என்றும் ‘கருப்பு நைட் ஷேட்’ என்றும் கூறப்படும் பழத்தைப் பற்றி தெரியுமா?

Do you know about the fruit called 'Makoy' and 'Black Nightshade'?
Do you know about the fruit called 'Makoy' and 'Black Nightshade'?https://www.amazon.com

கோய் பெரி என்ற மூலிகை வகை பழம் ஆயுர்வேத மருத்துவம் என்ற கிரீடத்தில் மாணிக்கக் கல்லாய் மிளிர்வது என்று கூறினால் அது மிகையாகாது. இதிலுள்ள மருத்துவ குணங்களும், உடல் ஆரோக்கியத்திற்குத் தரும் நன்மைகளும் மிக அதிகம். அவற்றைப்பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மகோய் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை வலுப்படுத்துகிறது. தொற்றுக் கிருமிகளின் ஊடுருவலைப் போராடித் தடுத்து நிறுத்தி, வாழ்க்கையின் திசையையே மாற்றக்கூடிய அபாயகரமான நோய் உண்டாகும் சூழலிலிருந்து உடம்பைப் பாதுகாக்க உதவுகிறது.

இதன் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமானது உடலில் ஏற்படும் வீக்கங்களைக் கட்டுப்படுத்தி, ஆர்த்ரைடிஸ், சிறுநீரகக் கோளாறு, குடல் நோய் போன்ற நாள்பட்ட வியாதிகள் உண்டாகும் அபாயத்தைத் தடுக்கிறது.

இதிலுள்ள ஹெபட்டோ ப்ரொடெக்டிவ் (Hepatoprotective) குணமானது கல்லீரல் ஆரோக்கியத்தைக் காப்பதற்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும். இது கல்லீரலின் நச்சுக்களை வெளியேற்றும் செயலில் கல்லீரலுக்கு உற்ற துணையாய் இருந்து மொத்த நச்சுக்களையும் உடலிலிருந்து வெளியேற்ற உதவி புரிகிறது.

இந்த அதிசயிக்கத்தக்க மூலிகையில்  கேன்சரை எதிர்த்துப் போராடும் குணம் அதிகம் உள்ளது. இது கேன்சர் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கவும், கேன்சர் கட்டிகள் உருவாகாமல் பாதுகாக்கவும் உதவுகிறது.

மகோய் பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மிக அதிகம் நிறைந்துள்ளன. அதிலுள்ள ஃபிளவோனாய்ட் மற்றும் ஃபினோலிக் ஆகிய கூட்டுப்பொருள்கள் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்த்துப் போராடவும், தீங்கிழைக்கும் ஃபிரிரேடிகல்கள் உண்டுபண்ணும்  செல் சிதைவுகளை சீர்படுத்தவும் உதவி செய்கின்றன.

மகோய் பெரியில் உடலுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஊட்டச்சத்துக்களும் வைட்டமின் A யும் அதிகளவில் நிறைந்துள்ளன. இவை பார்வைத் திறனை மேம்படுத்தவும், கண் ஆரோக்கியம் காக்கவும் உதவுகின்றன. மேலும், வயது கூடுவதால் கண்ணில் ஏற்படும் கோளாறுகளைக் களையவும் உதவுகின்றன.

இப்பழத்தை அப்படியே உண்பது சருமத்திற்கு பளபளப்பு தரும். ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், சுற்றுச்சூழல் காரணமாக சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடைக்க உதவுகின்றன.

மகோய் பெரியின் ஹைபோகிளைசெமிக் (Hypoglycemic) குணமானது, நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி சமநிலையில் வைக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
வாடகை வீடு பார்ப்பவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள் என்ன தெரியுமா?
Do you know about the fruit called 'Makoy' and 'Black Nightshade'?

நம் உடலுக்கு அபாயம் தரும் பல நோய்கள் உண்டாவதற்கு காரணியாக உள்ளவற்றில் ஒன்று  கொலஸ்ட்ரால் ஆகும். மகோய், கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி உயர் இரத்த அழுத்தம் வரும் அபாயத்தைத் தடுக்கிறது. இதனால் இதய நோய்கள் மற்றும் ஸ்ட்ரோக் வரும் அபாயமும் நீங்குகிறது.

ஜீரணக் கோளாறுகளும், ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியக் குறைபாடுகளும் பல வகையான நோய்கள் வரக் காரணமாகின்றன. மகோய் பழத்தில் சிறப்பான செரிமானத்துக்கு உதவக்கூடிய என்சைம்கள் அதிகம் உள்ளன. இவை மற்ற கோளாறுகளை நிவர்த்தி செய்து இலகுவாக மலம் வெளியேறவும் உதவுகின்றன.

இத்தனை நற்பயன்கள் கொண்ட மகோய் பெரியினை அனைவரும் உண்போம்; உடல் ஆரோக்கியம் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com