சாலக் பழத்திலிருக்கும் சத்துக்கள் எத்தனை தெரியுமா?

Do you know how many nutrients are in salak fruit?
Do you know how many nutrients are in salak fruit?https://blog.suvie.com

சாலக் என்பது இந்தோனேஷியாவை பிறப்பிடமாகக்கொண்டு, பனை மர உருவில் வளரும் ஒரு வெப்ப மண்டலத் தாவரத்திலிருந்து கிடைக்கும் ஒரு பழமாகும். நல்ல இனிப்பும் லேசான கசப்பு சுவையும் கொண்டு உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய அபூர்வப் பழம் இது.

இதன் தோல் பகுதி அடர் சிவப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் சிறு சிறு முட்களுடன் பாம்பின் செதில்கள் போல் காணப்படுவதால் இதற்கு பாம்புப் பழம் (snake fruit) என்றொரு பெயரும் உண்டு. இப்பழத்திலிருந்து கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

சாலக்கில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகளவில் நிறைந்துள்ளன. அவை ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்த்துப் போராடி நாள்பட்ட வியாதிகள் வரும் வாய்ப்பைத் தடுக்கின்றன; உடலின் மொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன.

இதிலிருக்கும் அதிகளவு வைட்டமின் Cயானது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது; கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்கச் செய்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதனால் மொத்த உடலும் பாதுகாப்புப் பெறுகிறது.

இதிலடங்கியுள்ள நார்ச்சத்தானது செரிமானத்தை சீராக்குகிறது; மலச்சிக்கலைத் தடுக்கிறது; ஜீரண மண்டல அனைத்து உறுப்புகளுக்கும் ஆரோக்கியம் தருகிறது. அதன் மூலம் உடல் எடையை சரியான அளவில் பராமரிக்க முடிகிறது.

இப்பழத்திலுள்ள பொட்டாசியமானது இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தி இதய நாளங்களில் கோளாறு ஏற்படுவதைத் தடுக்கிறது. அதனால் இதயம் ஆரோக்கியத்துடன் இயங்க முடிகிறது.

இதையும் படியுங்கள்:
வாக்குவாதம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் எவை தெரியுமா?
Do you know how many nutrients are in salak fruit?

நம் உடலின் அநேக இயக்கங்களுக்கும் நீர்ச்சத்தே ஆதாரமாக விளங்குகிறது. சாலக் பழத்தில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இது மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் இயற்கையான முறையில் பயனளிக்கக் கூடியது.

இப்பழத்தில் இரும்புச் சத்து, பாஸ்பரஸ், வைட்டமின்கள் போன்ற முக்கிய ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை ஊட்டச் சத்துக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து உடலுக்கு நல்ல ஆரோக்கியம் அளிக்கின்றன. நூறு கிராம் அளவு சாலக் பழத்தில் அடங்கியுள்ள சத்துக்களாவன: ஆற்றல் 77 kcal, புரதம் 0.4 கிராம், கால்சியம் 28 mg, காப்பர் 0.08 mg, இரும்பு 4.2 mg, பாஸ்பரஸ் 18 mg, துத்தநாகம் 0.2 mg, வைட்டமின் C 2mg, பீட்டா கரோட்டின் 4 மைக்ரோகிராம், தண்ணீர் 78.0 கிராம்.

பாலி, ஜாவா, சுமத்ரா போன்ற சுற்றுலாப் பயணிகள் கூடும் தீவுகளில் இப்பழம் வியாபார ரீதியில் லாபம் ஈட்டித் தரும் பழமாகக் கருதப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com