ஆப்பிளின் ஊட்டச்சத்துக்களை முழுமையாகப்  பெற எப்படி உண்ண வேண்டும் தெரியுமா?

Apple with Girl
Apple with Girlhttps://pesutamizhapesu.com

ழங்களிலேயே அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது ஆப்பிள். ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள்  சாப்பிட்டு வந்தால் டாக்டரை சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றொரு ஆங்கிலப் பழமொழி கூட உண்டு. அப்படிப்பட்ட பெருமைக்குரிய ஆப்பிள் பழத்தை எவ்விதம் உட்கொண்டால் அதிலுள்ள நன்மைகளை முழுமையாகப் பெறலாம் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

‘ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும், தோலை சீவி விட்டு சாப்பிட்டால் பேதி (diarrhoea) குணமாகும், வேகவைத்து சாப்பிட்டால் மொத்த ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும்’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தீப்சிகா ஜெயின்.

ஆப்பிளின் தோலிலுள்ள கரையாத நார்ச்சத்து மலக்கழிவுகளை ஒருங்கிணைத்து மலக்குடல் வழியே சீராக நகர்ந்து வெளியேற உதவுவதாகக் கூறுகிறார் உணவு ஆலோசகர் கனிக்கா மல்கோத்ரா. இதனால் மலச்சிக்கல் நீங்குகிறது.

ஆப்பிள் பழத்தின் உள்புறம் உள்ள சதைப் பகுதியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளன. அதிலுள்ள பெக்டின் (Pectin) என்ற பொருள் ஜெல் வடிவில் உருவெடுத்து அதன் மூலம் மலக்குடல் வழியே  கழிவுகள் வெளியேறும் வேகத்தைக் குறைக்க உதவுகிறது. இதனால் வயிற்றுப் போக்கு குணமாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது. வயிற்றுப் போக்கு நோய் உள்ளவர்கள் ஆப்பிளை தோல் நீக்கி உண்பது நலம்.

இதையும் படியுங்கள்:
ஷேக்ஸ்பியர் பற்றிய சில சுவையான தகவல்கள்!
Apple with Girl

ஆப்பிளை சமைக்கும்போது அதிலிருந்து வெளியேறும் பெக்டின், பிரீபயோட்டிக்காக செயல்பட்டு, ஜீரண மண்டல உறுப்புகளிலிருக்கும் நன்மை தரும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதனால் செரிமானமும், நோயெதிர்ப்பு சக்தியும் மேன்மையடைகின்றன.

ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு  உதவி புரிவதோடு மட்டும் நிற்காமல், நம் உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்க ஆப்பிள் மேலும் பல நன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. வைட்டமின் C, பொட்டாசியம், ஆன்டி ஆக்சிடன்ட்கள், டயட்டரி நார்ச்சத்து போன்ற சத்துக்கள், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தவும் ஆப்பிள் பெரிதும் உதவுகின்றது.

தோலை நீக்கியோ, நீக்காமலோ, வேக வைத்தோ, பச்சையாகவோ எப்படி சாப்பிட்டாலும் ஆப்பிள் நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருவதாக உள்ளது. எனவே, நாம் தினசரி உட்கொள்ளும் சரிவிகித உணவின் ஒரு பகுதியாக ஆப்பிளை சேர்த்து உண்போம்; மருத்துவ செலவை கட்டுப்படுத்துவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com