உண்பதற்கு முன் ஊற வைக்க வேண்டிய 7 வகை உணவுகள் எவை தெரியுமா?

உண்பதற்கு முன் ஊற வைக்க வேண்டிய 7 வகை உணவுகள் எவை தெரியுமா?
Published on

நாம் அனைவரும் உயிர் வாழ்வதற்கு உணவு உண்பது அவசியம். அவ்வாறு உண்ணும் உணவுகளில் பழங்கள், காய்கறி, கீரை, கொட்டைகள், விதைகள் தானியங்கள் என பல வகை உண்டு. அந்த உணவுகளை எப்படி, எப்போது, எவ்வளவு உண்ண வேண்டும் என்பதற்கு அளவுகோலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை இரவிலேயே மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றி ஊற வைத்துப் பின் காலையில் உட்கொள்வதால் அவற்றிலிருந்து கிடைக்கும் ஊட்டச் சத்துக்களின் அளவு கூடும். அப்படி ஊற வைத்து உண்ணக்கூடிய உணவுகள் எவை என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. கசகசா (Poppy Seeds): கசகசாவில் வைட்டமின் B சத்து அதிகம் உள்ளது. இது மெட்டபாலிசம் சிறப்பாக நடைபெறவும், கொழுப்புகள் எரிக்கப்பட்டு எடை குறையவும் உதவும். கசகசாவை ஊற வைத்து அரைத்து சமையலில் சேர்த்து உண்ணும்போது, உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்புகள் கரையும்.

2. வெந்தயம்: வெந்தயத்தில் நார்ச்சத்து மிக அதிகம் உள்ளது. இது ஜீரண மண்டல உறுப்புகளை நன்கு சுத்திகரிக்க உதவும். இரவில் ஒரு டம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தைப் போட்டு ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் அதை குடித்து வந்தால் குடல் இயக்கம் சீராகும்.

3. ஃபிளாக்ஸ் சீட்ஸ்: இந்த விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இதை ஊற வைத்து உண்ணும்போது அவை, உடலில் அதிகப்படியாக சேர்ந்திருக்கும் கொலஸ்ட்ரால் அளவை குறையச் செய்யும்.

4. பாதாம் பருப்புகள்: இவற்றை இரவில் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து காலையில் உண்ணும்போது இவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவு அதிகரிக்கும். உயர் இரத்த அழுத்தம் சமநிலைப்படும். கெட்ட கொழுப்புகளின் அளவு குறையும். ஊற வைத்த பாதாம் பருப்புகள் மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் உதவும். இப்பருப்பை ஊற வைத்து உண்பதால் செரிமானம் சுலபமாகும்.

இதையும் படியுங்கள்:
பெரியவர்கள் அறிவுறுத்தும் வாழ்க்கைப் பாடங்கள் என்னென்ன?
உண்பதற்கு முன் ஊற வைக்க வேண்டிய 7 வகை உணவுகள் எவை தெரியுமா?

5. உலர் திராட்சை (Raisins): உலர் திராட்சைகளை இரவில் ஊற வைத்து காலையில் உண்பதால் நம் சரும ஆரோக்கியம் மேன்மை அடையும். சருமம் பளபளப்பு பெறும்.

6. பீநட் (Ground Nut): வேர்க்கடலைப் பருப்புகளை ஊறவைத்து உண்பதால் இதய ஆரோக்கியம் பலம் பெறும். இதய இரத்த நாளங்களின் செயல்பாடுகள் சிறக்கும்.

7. அத்திப் பழம்: தினசரி ஒரு ஊற வைத்த அத்திப் பழம் உண்பதால் எலும்புகள் பலமடையும்; நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.

மேற்கூறிய உணவுப் பொருட்களை எப்பொழுதும் ஊற வைத்து உட்கொண்டு ஆரோக்கிய நன்மைகள் அதிகம் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com