செலரி ஜூஸ் அருந்துவதால் கிடைக்கும் நற்பயன்கள் தெரியுமா?

Do you know the benefits of drinking celery juice?
Do you know the benefits of drinking celery juice?https://www.thespruceeats.com

செரிமானம் உள்ளிட்ட நம்  உடலின் மொத்த இயக்கத்திற்கும் அடிப்படை ஆதாரமாக விளங்குவது நிறைவான நீர்ச்சத்தாகும். அதற்கு நாம் ஒவ்வொருவரும் ஒரு நாளில் இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது மிகவும் அவசியம். அவ்வப்போது காய்கறி மற்றும் பழ ஜூஸ்களை அருந்துவதும் உடலின் நீர்ச்சத்தை அதிகரிப்பதுடன் ஊட்டச் சத்துக்களையும் அளிக்கக்கூடியவை. அவ்வகையில் செலரி ஜூஸ் அருந்துவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

செலரி (Celery) ஜூஸில் நீர் மற்றும் எலக்ட்ரோலைட்களின் அளவு மிகவும் அதிகம். இதிலுள்ள வைட்டமின் C, பீட்டா கரோட்டீன், ஃபிளவோனாய்ட் போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்கள் ஆக்சிடேடிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்த்துப் போராட உதவுகின்றன; வீக்கத்தைக் குறைக்கின்றன; நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன; நாள்பட்ட வியாதிகள் வரும் வாய்ப்பையும் தடுக்கின்றன.

இதிலுள்ள இயற்கையான நார்ச்சத்துக்கள் ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவி புரிவதுடன், ஜீரண மண்டல உறுப்புகளுக்குள்ளிருக்கும் நுண்ணுயிரிகளை சமநிலையில் வைக்கவும் செய்கின்றன. மேலும், பசியைக் குறைத்து, உட்கொள்ளும் உணவின் அளவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தி எடை பராமரிப்பிற்கு உதவுகிறது.

அதிகம் பதப்படுத்தப்பட்ட இறைச்சி போன்ற உணவுகளை உண்ணுவதால் ஏற்படும் அசிடிட்டிக்கு, செலரியிலிருக்கும் காரத்தன்மை உண்டுபண்ணும் குணமானது எதிர்வினை புரிந்து உடல்  ஆரோக்கியத்தை சமநிலைப்படுத்துகிறது.

இதன் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமானது, நாள்பட்ட வீக்கம், மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்திலுள்ள குறைபாடுகளைக் களைந்து உடல் ஆரோக்கியம் நிலைபெற உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிகளவு கொழுப்புகளை இதிலுள்ள பொட்டாசியம் சமநிலைப்படுத்தி இதய நாளங்கள் கோளாறு ஏதுமின்றி இயங்க உதவுகிறது. இதனால் இதயநோய் வரும் ஆபத்து தடுக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
டிஜிட்டல் பூட்டின் அவசியம் தெரியுமா?
Do you know the benefits of drinking celery juice?

செலரியின் டையூரெடிக் குணமானது நச்சுக்களை உடலிலிருந்து வெளியேற்ற உதவுகிறது. தொடர்ந்து செலரி ஜூஸ் அருந்தி வர, கல்லீரலின் நச்சுக்களை வெளியேற்றும் செயல் சிறப்புற நடைபெற்று உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் நீர்ச்சத்தானது சருமம் பளபளப்பு பெற உதவுகின்றன. மரு மற்றும் கறைகளை நீக்கி, சரும வியாதிகள் வராமலும் பாதுகாக்கின்றன.

செலரி, குறைந்த கலோரி அளவு கொண்டது. செலரியிலுள்ள கால்சியம் மற்றும் சிலிகான் போன்ற கனிமச் சத்துக்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மூட்டுக்களின் வலியைக் குறைக்கின்றன. இத்தனை நற்பயன்கள் கொண்ட செலரி ஜூஸை அடிக்கடி அருந்தி ஆரோக்கியம் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com