தினமும் துளசி ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?

Benefits of drinking basil juice
Benefits of drinking basil juice
Published on

ம் வீட்டில் இருக்கும் ஆயுர்வேத மூலிகையான துளசி எண்ணற்ற பலன்களைத் தன்னுள் கொண்டு இருக்கின்றது. ‘மூலிகைகளின் ராணி’ என்று அழைக்கப்படும் துளசி ஜூஸ் தினமும் அருந்துவதால் உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. துளசியில் ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆன Flavonoids, polyphenols உள்ளது. இது உடலில் தீங்கு விளைவிக்கக்கூடிய ப்ரீ ரேடிக்கலை குறைத்து செல்கள் பாதிப்படைவதில் இருந்து பாதுகாக்கிறது.

2. தினமும் துளசி ஜூஸ் குடிப்பது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனால், நம்மைத் தாக்கும் நோய் தொற்றிலிருந்து அதிக பாதுகாப்பு கிடைக்கும்.

3. துளசிக்கு வயிற்றுல் உள்ள உப்பு சத்தை போக்கும் பண்பு உள்ளது. எனவே, இது செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. மேலும், வாயு தொல்லை, உப்புசம் போன்ற பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் துளசி ஜூஸ் குடிப்பது மற்றும் குடிக்கும் நீரில் துளசி இலைகளை சேர்த்துக் கொள்வது உடலில் உள்ள கெட்ட கழிவுகளை வெளியேற்றி ஜீரணத்திற்கு உதவுகிறது.

4. துளசியை அடாப்டோஜெனிக் மூலிகை என்று சொல்வார்கள். இது உடலில் உள்ள ஸ்ட்ரெஸ்ஸை போக்கி ரிலாக்ஸான மனநிலையை தருகிறது. துளசி ஜூஸ் குடிப்பது ஸ்ட்ரெஸ் மற்றும் பதற்றத்தைப் போக்க உதவுகிறது.

5. துளசியில் நுண்ணுயிர்களை எதிர்க்கும் பண்பு உள்ளது. இது வாயில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது. தினமும் துளசி ஜூஸ் குடிப்பது வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்கி ஆரோக்கியமான ஈறுகளுக்கு வழிவகுக்கிறது.

இதையும் படியுங்கள்:
அதிகமாகத் தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு ஆபத்தாகுமா?
Benefits of drinking basil juice

6. துளசியை அதிகமாக மூச்சு சம்பந்தமான பிரச்னைகளை போக்கவே பயன்படுத்துவார்கள். சளி, இருமல், ஆஸ்துமா பிரச்னைகளுக்கு துளசி ஜூஸ் குடிப்பதால், சளி மற்றும் மூக்கடைப்பு நீங்கி நன்றாக மூச்சு விடுவதற்கு எளிதாகிறது.

7. உடல் எடை குறைக்க ஆசைப்படுபவர்கள் தினமும் காலையில் துளசி ஜூஸ் மற்றும் துளசி டீ போன்றவை எடுத்துக்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கழிவுகளை நீக்கி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதனால், உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்பை எரித்து உடல் எடை குறைய உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com