துளசி குடிநீர்
துளசி குடிநீர்https://www.healthshots.com

காலையில் வெறும் வயிற்றில் துளசி நீர் பருகுவதால் உண்டாகும் பயன்கள் தெரியுமா?

Published on

பெருமாள் கோயிலில் பிரசாதமாகக் கொடுக்கப்படும் சக்தி வாய்ந்த மூலிகையான துளசி நீர் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது. அதைத் தவிர, துளசி ஒரு நறுமண மூலிகையாகும். துளசி இலைகளுடன், துளசி நீரும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்கக் கூடியதாகும். காலையில் வெறும் வயிற்றில் துளசி நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. துளசியில் வைட்டமின் சி மற்றும் ஜிங்க் சத்து நிறைந்துள்ளது. இது இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.

2. துளசி நீரை அதிகாலையில் குடிப்பதால் செல்களின் செயல்பாடு அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

3. துளசியில் உள்ள கேம்பீன், சினோல், யூஜெனால் ஆகியவை நெஞ்சு சளியை குறைக்கிறது. துளசி இலையின் சாற்றில் தேன் மற்றும் இஞ்சி சேர்த்து பருகி வந்தால், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, காய்ச்சல், இருமல், சளி போன்றவற்றில் இருந்து நிவாரணம் பெறலாம்.

4. துளசி நீரை குடிப்பதால் இரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்து குறைகிறது. இஸ்கிமியா, பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கிறது. துளசி நீரில் அதிக ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பதால் இதய நோய்களைத் தடுக்கிறது.

5. துளசியில் ஒசிமுமோசைடுகள் ஏ மற்றும் பி கலவைகள் உள்ளன. இது மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

6. துளசி நீர் மூளையில் உள்ள நரம்பியக்கடத்திகளான செரோடோனின் மற்றும் டோபமைனை சமன் செய்கிறது. இது நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கிறது.

7. துளசியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தைக் குறைத்து இரத்த அழுத்தத்தை சாதாரணமாக வைத்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
கலர் கலரான 5 வகை டீக்களும் அதன் ஆரோக்கிய நன்மைகளும்!
துளசி குடிநீர்

8. துளசி நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் பற்கள் மற்றும் ஈறுகள் வலுவடையும். இது வாய் புண்களை குணப்படுத்துகிறது மற்றும் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

9. நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதில் துளசி நீரின் பங்கு அளப்பரியது.

10. துளசி நீர் வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி கலோரிகளை எரித்து உடல் எடையை விரைவில் குறைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.

11. துளசி நீர் செரிமான மண்டலத்தை சீராக்கி வயிற்றில் உள்ள கழிவுகளை அகற்றி நச்சுக்களை நீக்கி உடலை சுத்தப்படுத்துகிறது.

துளசி நீர் செய்முறை: சில துளசி இலைகளை இரவு முழுவதும் குடி தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் அதைப் பருகலாம்.

logo
Kalki Online
kalkionline.com