மால் அப்சார்ப்ஷன் சிண்ட்ரோம் ஏற்படுத்தும் விளைவுகள் தெரியுமா?

Effects of malabsorption syndrome
Effects of malabsorption syndrome
Published on

ரோக்கியமான ஊட்டச்சத்து உள்ள உணவுகளை உண்ணும்போது நமது உடல் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உறிஞ்சி உடலை ஆரோக்கியமாக்கும். ஆனால், மால் அப்சார்ப்ஷன் (Malabsorption) சிண்ட்ரோம் எனப்படும் ஒரு நிலை, உண்ணும் உணவில் உள்ள பல ஊட்டச்சத்துக்களை உடலால் எடுத்துக்கொள்ள முடியாததை குறிக்கிறது. இது பல்வேறு உடல் நலப் பிரச்னைகளுக்கு வழி வகுக்கிறது. அது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

மால் அப்சார்ப்ஷன் காரணங்கள்: சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் நாள்பட்ட கணைய அழற்சி மற்றும் கணையத்தை பாதிக்கும் பிற நோய்கள், லாக்டோஸ் சகிப்புத்தன்மை அல்லது பிறநொதி தொடர்பான நிலைமைகள், செலியாக் நோய் போன்ற குடல் கோளாறுகள், கோதுமை, பார்லி மற்றும் கம்பு ஆகியவற்றிலிருந்து வரும் பசையம், ஒருவரின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்குகிறது. கடுமையான இதய செயலிழப்பு மற்றும் குடல் சுவர் திரவத்தால் வீக்கம் அடைகிறது. இது ஊட்டச்சத்துக்களை நன்றாக உறிஞ்சாது. இதனால் மால் அப்சார்ப்ஷன் சிண்ட்ரோம் ஏற்படுகிறது. செலியாக் நோய், கிரோன் நோய், நாள்பட்ட கணைய அழற்சி, குடல் நோய்த்தொற்றுகள் மற்றும் சில மருந்துகள் போன்றவை மால் அப்சார்ப்ஷன் நோய்க்குறியின் அடிப்படைக் காரணங்களில் அடங்கும்.

மால் அப்சார்ப்ஷன் சிண்ட்ரோம் ஏற்படுத்தும் விளைவுகள்:

வைட்டமின் ஏ குறைபாடு: இது பார்வைக் கோளாறுகள் மற்றும் வறண்ட சருமத்தை ஏற்படுத்தும்.

வைட்டமின் டி கோளாறு: எலும்பு வலி, எலும்பு முறிவு ஏற்படும் அபாயம், குழந்தைகளுக்கு ரிக்கெட்ஸ் நோய் போன்றவை.

வைட்டமின் பி12 குறைபாடு: இது சோர்வு, பலவீனம் மற்றும் நரம்பியல் பிரச்னைகளை உண்டாக்கும். நரம்புகளில் உணர்வின்மை மற்றும் சமநிலையின்மை பிரச்னையை உண்டாக்கும்.

ஃபோலேட் குறைபாடு: இரத்த சோகை, சோர்வு மற்றும் கர்ப்பத்தில் ஏற்படும் நரம்புக் குழாய் குறைபாடுகள் போன்றவை அதிகரிக்கும். இரும்புச் சத்துக் குறைபாடு காரணமாக இரத்த சோகை, சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படும்.

எடை இழப்பு: உடலால் போதுமான ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச முடியாமல் போகும்போது எடை இழப்பு உண்டாகும். எடை அதிகரிப்பதில் மிகுந்த சிரமம் உண்டாகும்.

வயிற்றுப்போக்கு மற்றும் ஸ்டீடோரியா: அடிக்கடி கொழுப்பு கொண்ட தளர்வான மலம் ஏற்படலாம். இது பெரும்பாலும் இரப்பை குடல் அறிகுறிகளுக்கு வழி வகுக்கும்.

வயிற்று வலி மற்றும் வீக்கம்: செரிமானம் ஆகாத உணவு குடல் வழயாக செல்வதால் நோயாளிகள் வயிற்று சம்பந்தமான அசௌகரியங்கள், தசைப்பிடிப்பு மற்றும் வீக்கம் ஆகியவற்றை அனுபவிக்கலாம்.

குழந்தைகளின் வளர்ச்சி சிக்கல்கள்: குழந்தைகளுக்கு வளர்ச்சி தாமதமாகலாம் அல்லது வளர்ச்சியை பாதிக்கலாம். இதனால் குழந்தைகள் போதுமான ஊட்டச்சத்தில்லாமல் மோசமான எடை இழப்பு அல்லது அதிகரிப்புக்குக் கூட வழிவகுக்கும்.

எலும்புப் பிரச்னைகள்: கால்சியம் மற்றும் வைட்டமின் டியின் மால் அப்சார்ப்ஷன் ஆஸ்டியோபோரோசிஸுக்கு வழிவகுக்கும். எலும்பு முறிவு அபாயத்தை அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
வாயு பிரச்னைக்கான அறிகுறிகள், காரணங்கள் மற்றும் தீர்வுகள்!
Effects of malabsorption syndrome

சருமப் பிரச்னைகள்: சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் குறைபாடு காரணமாக சொறி மற்றும் சரும அழற்சி ஏற்படலாம். முடி உதிர்தல் மற்றும் சரும புண்கள் ஆகியவை துத்தநாகக் குறைபாடு காரணமாக ஏற்படும்.

சோர்வு மற்றும் பலவீனம்: சோர்வு மற்றும் தசை பலவீனம் போன்றவை போதுமான ஊட்டச்சத்து உறிஞ்சப்படாததால் ஏற்படும். குறிப்பாக, புரதம் மற்றும் இரும்பு குறைபாடு காரணமாக இவை நிகழ்கின்றன.

உளவியல் விளைவுகள்: ஊட்டச்சத்து குறைபாடுகள் மனநிலை மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளை பாதித்து, மனச்சோர்வு பதற்றத்திற்கு வித்திடும்.

சிக்கல்கள்: நீர் இழப்பு, எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக தொற்று நோய்களுக்கு அதிக உணர்திறன் போன்ற கடுமையான சிக்கல்களை உடலில் உருவாக்கலாம்.

மால் அப்சார்ப்ஷன் சிண்ட்ரோம் அறிகுறிகளை அனுபவித்தால், சரியான நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கு மருத்துவ ஆலோசனையைப் பெறுவது முக்கியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com