மறந்துபோன இந்த கீரைகளின் மகத்துவம் தெரியுமா?

Do you know the greatness of these forgotten greens?
Do you know the greatness of these forgotten greens?
கோவீ.ராஜேந்திரன்

வணக்கம், அடிப்படையில் நான் ஓர் ஆட்டோமொபைல் இன்ஜினியர், ரிலாக்சேஷனுக்காக பத்திரிகைகளில் ஆரம்பத்தில் துணுக்குகள் எழுத ஆரம்பித்தேன். பின்னர் கட்டுரைகள் எழுதும் அளவிற்கு வந்துள்ளேன். தமிழகத்தில் வரும் முன்னணி பத்திரிகைகளில் என்னுடைய கட்டுரைகள் 500க்கும் மேற்பட்டவைகள் வந்துள்ளது. பொது அறிவு சம்பந்தமாக இது வரை 12 புத்தகங்கள் எழுதியுள்ளேன். கல்கி ஆன்லைன் பத்திரிகை குழு நிர்வாகம் மற்றும் அதன் ஆசிரியர் குழு அன்பாலும், ஆதரவாலும் இது வரை 300 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி உள்ளேன் என்பதை நன்றியடன் தெரிவித்துக் கொள்கிறேன். வித்தியாமான தகவல்கள் அடங்கிய படைப்புகள் வழங்க வேண்டும் என்பது என் விருப்பம்.

Updated on

ம் அன்றாட உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொண்டால் நாம் தினந்தோறும் ஆரோக்கியத்தை பேணிக் காப்பதில் ஆர்வமாக இருக்கின்றோம் என்று அர்த்தம். அந்த வகையில் மனித நலத்திற்கு உறுதுணையாக இருக்கும் எண்ணற்ற கீரைகளின் சில பெயர்கள் நமது நினைவில் இருக்கும், பல நினைவில் இருக்காது. அப்படி மறந்துபோன மகத்தான சில கீரைகளின் ஆரோக்கிய நன்மைகள் பற்றிய பதிவுதான் இது.

மூக்கிரட்டை கீரை: சாரணைக் கொடி, சாரணத்தி என்ற பெயர்களில் மூக்கிரட்டை கீரை அழைக்கப்படுகிறது. இது புற்கள் அதிகம் வளர்ந்துள்ள இடங்களில் கொடி போலப் படர்ந்து காணப்படும். இதை சமைத்து சாப்பிடுவதால் ஈறுகள் மற்றும் பற்கள் வலுப்பெறும். மேலும், பித்தநீர் சுரப்பையும் இது ஊக்குவிக்கிறது. இந்த கீரையையும், அதன் வேர்களையும் நன்கு காயவைத்து, பொடி செய்து நீரில் வேகவைத்து குடிக்கலாம். இது இரத்தத்தை சுத்தம் செய்கிறது. தொடர்ச்சியாக சாப்பிடுவதால் மூலப் பிரச்னை குணமாகும்.

பொடுதலை கீரை: அதிக துவர்ப்பு தன்மை உடைய பொடுதலை கீரை, சிறிய செடி போலவும், கொடி போலப் படர்ந்தும் இருக்கும். இதை பொறுதலை, பூற்சாதம் என்றும் அழைப்பர். இது வெப்பத்தன்மை கொண்டது. இதன் இலைகளை அரைத்து தலைவலி உள்ள இடத்தில் பற்றுப் போட்டால், ஒற்றைத் தலைவலி குணமாகும். இதை காய வைத்து அரைத்து, தலைக்கு தேய்த்து குளித்து வர, தலையில் பொடுகுத் தொல்லை நீங்கும். இப்பொடியை அரைத்து குடித்துவர வயிற்றுக் கோளாறுகள் குணமாகும். இது கருப்பை பிரச்னை, சீதபேதிக்கும் நன்மை பயக்கும்.

குமுட்டிக்கீரை: கிராமங்களில் அதிகளவு காணப்படும் இந்த குமட்டிக் கீரையின் பூக்கள், சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில், அதன் நிலங்களுக்கேற்ப காணப்படும். செரிமான பாதிப்பு, மலச்சிக்கல், பித்தம், மூலம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வாக, இது முழு ஜீரண மண்டலத்தையும் காக்கிறது. காய்ச்சல், நோய்த் தொற்றுகளுக்கு எதிராகவும் செயல்படும் குமுட்டிக் கீரை, உடலில் உள்ள கெட்ட நீரையும் வெளியேற்றுகிறது. ஆனால், இதை பக்குவமாக சமைக்க வேண்டியது அவசியமாகும்.

இதையும் படியுங்கள்:
ஐயப்பனின் அறுபடை வீடுகள் பற்றி தெரியுமா?
Do you know the greatness of these forgotten greens?

துத்தி கீரை: வேலிகளில் காணப்படும் துத்தி இலைக் கீரை, மஞ்சள் பூவுடன் சிறிய விதைகளைக் கொண்டு காணப்படும். இலையை தண்ணீர் விட்டு அரைத்து, அதில் வாய் கொப்பளித்தால் பற்கள், ஈறுகள் வலிமை பெறும். இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, உடலுக்கு ஒத்தடம் கொடுத்தால், உடல் வலி நீங்கும். மேலும், இது வயிற்றுப் புழுக்களை நீக்கவும், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது. மூளையில் ஏற்படும் புற்றுநோய் செல்களை அழிக்கும் சக்தியும் இதில் உள்ளதாகக் கூறப்படுகிறது. மனப் பதற்றம், ஒவ்வாமை, ஆஸ்துமா, சிறுநீர் அடைப்பு போன்ற நோய்களுக்கும் இது தீர்வாக இருக்கிறது. குளிக்கும் நீரில் இந்த இலைகளை போட்டு குளிக்கலாம். இது கடைகளில் துத்திப் பொடியாகவும் கிடைக்கிறது.

தவசிக் கீரை: சற்று அரிதாகக் கிடைக்கும் தவசிக் கீரையில் நார்ச்சத்து, புரதச்சத்து, மாவுசத்து, நீர்சத்துகள் போன்ற சத்துகளும், பொட்டாசியம், சுண்ணாம்பு, இரும்பு, மாங்கனீசு, பாஸ்பரஸ் போன்ற கனிமச் சத்துகளும் அதிகளவு உள்ளன. இது உடல் வளர்ச்சியையும், எலும்புகள் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. எலும்பு பலவீனம் கொண்ட முதியோர்களுக்கு இது சிறந்த மருந்தாகும். இது ஹிமோகுளோபினை அதிகரித்து, நரம்புத் தளர்ச்சி மற்றும் இரத்த சோகையை நீக்க உதவுகிறது. இதன் இலைகளிலிருந்து சாறு எடுத்து தேன் கலந்து அருந்தினால், சருமச் சுருக்கம் நீங்கி பளபளப்பாகும்.

logo
Kalki Online
kalkionline.com