சாக்லேட் சாப்பிடுவதால் அதிலுள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பு நம் உடல் எடையை அதிகரித்து, அதன் மூலம் இதய நோய் வரும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்ற கருத்து பொதுவாக உண்டு. ஆனால், டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் நம் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
டார்க் சாக்லேட்டில் அடங்கியுள்ள ஃபிளவனோய்ட்ஸ், பாலிஃபினால்ஸ் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ், ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்ஸுக்கு எதிராக செயல் புரிந்து செல்கள் சேதமடைவதைத் தடுக்கிறது.
தொடர்ந்து டார்க் சாக்லேட்டை சாப்பிட, இதய நோய் வரும் அபாயம் குறைகிறது. இரத்த அழுத்தம் நார்மல் ஆகிறது. உடலில் ஏற்படும் வீக்கம் குறைகிறது. இரத்த ஓட்டம் சீராகிறது. உடலில் ஆங்காங்கே உண்டாகும் இரத்த உறைவு நீங்கி, கார்டியோ வாஸ்குலர் ஹெல்த் மேம்படும். ஃடார்க் சாக்லேட் சாப்பிட, பிளவனோய்ட்ஸ் அறிவாற்றலை மேலோங்கச் செய்து, மறதி நோயை குணப்படுத்துகிறது. செரோடோனின் மற்றும் என்டார்ஃபின் ஹார்மோன்களை உற்பத்தி செய்து உடல் வலி போக்கி, மனதை மகிழ்ச்சியாக வைததுக்கொள்ளச் செய்கிறது. கார்ட்டிசால் போன்ற ஸ்ட்ரெஸ் ஹார்மோன் சுரப்பைக் கட்டுப்படுத்தி, மன அழுத்தம் வராமல் பாதுகாக்கிறது. உடலில் சேர்ந்திருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது.
ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் சரும செல்களில் ஏற்படும் சேதத்தைத் தடுத்து முதுமையின் அறிகுறி தோன்றுவதை தாமதப்படுத்துகிறது.
டார்க் சாக்லேட்டிலுள்ள இரும்புச்சத்து மக்னீஸியம், காப்பர், மினரல்ஸ் ஆகியவை உடலின் பல்வேறு இயக்கங்களுக்கு உறுதுணை புரிகின்றன.
அதிக நேரம் பசி தாங்கச் செய்து, உடல் எடைக் குறைப்புக்கு உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
டார்க் சாக்லேட்டிலுள்ள அதிகளவு கோகோ நீரிழிவு நோயை குணப்படுத்துவதில் பெரும் பங்காற்றுகிறது.
இத்தனை வகை நற்பயன்களை உள்ளடக்கியிருக்கும் டார்க் சாக்லேட்களை இனி, தேடிச் சென்று வாங்கிச் சுவைப்பீர்கள்தானே?