எர்ஃபர்டர் முள்ளங்கியில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

Erfurter Radish
கருப்பு முள்ளங்கிhttps://specialtyproduce.com

பொதுவாக, வெள்ளை, சிவப்பு, இளம் சிவப்பு, கருப்பு ஆகிய நான்கு நிறங்களில் முள்ளங்கிகள் கிடைக்கின்றன. கருப்பு நிற முள்ளங்கி பிராசிகேசியே குடும்பத்தின் வேர் காய்கறியாகும். இவை வட்டமான மற்றும் நீளமான வகைகளில் கிடைக்கின்றன. கருப்பு நிற முள்ளங்கிதான் முதன் முதலில் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இவை இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை எங்கும் பரவலாக பயிரிடப்பட்டது. இது ஒரு வருடாந்திர தாவரமாகும். இதன் வேர் கருப்பு அல்லது பழுப்பு நிற தோலில் வெள்ளை சதையுடன் காணப்படும். பொதுவாகக் கருப்பு முள்ளங்கி மற்ற முள்ளங்கி வகைகளை விட பெரியது. இவை முதிர்ச்சியடைய 35 நாட்கள் முதல் 55 நாட்கள் வரை ஆகும்.

கருப்பு முள்ளங்கியை பச்சடியாகவோ, சாலடாகவோ, சூப்பாகவோ சமைத்து சாப்பிடலாம். நாட்டுப்புற மருத்துவத்தில் கருப்பு முள்ளங்கி பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. கருப்பு முள்ளங்கி சாறில் குளுக்கோசினோலேட்டுகள் உள்ளன.குளுக்கோராபாசாடின் மற்றும் குளுக்கோராபனின் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இதன் விளைவாக கொலஸ்ட்ரால், பித்தப்பை கற்களைத் தடுப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.

கருப்பு முள்ளங்கி, கருப்பு ஸ்பானிஷ் முள்ளங்கி அல்லது எர்ஃபர்டர் முள்ளங்கி என்றும் அழைக்கப்படுகிறது. கருப்பு தோல் மற்றும் வெள்ளை சதை கொண்ட  முள்ளங்கி வகையிது. இவை பொதுவாக பெரியதாகவும் கடினமான அமைப்பைக் கொண்டதாகவும் இருக்கும்.

கருப்பு முள்ளங்கிகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, துத்தநாகம், இரும்பு சத்து, பொட்டாசியம், செலினியம், சல்பர், மெக்னீசியம் மற்றும் பல்வேறு தாதுக்கள் உள்ளன.

வேர்க்கிழங்கு வகை காய்கறிகளில் மிக முக்கியமான, ஜூஸ் அதிகம் நிறைந்த ஒரு காய் இது. ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்களைக் கொண்டது. இதில் உடலுக்கு தேவையான ஆந்தோசயனின், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் போன்ற பொருட்கள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
ஆயுள் விருத்தி வேண்டி வழிபடப்படும் அற்புதக் கோயில்!
Erfurter Radish

கருப்பு முள்ளங்கி சளி மற்றும் காய்ச்சலைப் போக்கக்கூடிய குணம் கொண்டது. இது தவிர, குளிர் காலத்தில் ஏற்படும் ஜலதோஷம், இருமலுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது.

கருப்பு முள்ளங்கியின் சதைப் பகுதியை மிக்ஸியில் அரைத்தெடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட ஜலதோஷம், இருமல் சரியாகிவிடும். உடம்பில் இருக்கும் சளியை வெளியேற்ற கருப்பு முள்ளங்கி ஜூஸ் மிகவும் ஏற்றது. கருப்பு முள்ளங்கி ஒரு மூலிகை மருந்து. கல்லீரல் மற்றும் கல்லீரல் பாதிப்பால் உண்டாகும் மஞ்சள் காமாலை போன்ற பிரச்னைகளை தீர்க்கக் கூடியது. இந்த முள்ளங்கியின் இலைகளையும் சமைத்து உண்ணலாம்.

முள்ளங்கி விதையிலிருந்து எடுக்கப்படும் கடுகெண்ணெய் போன்ற எண்ணெய் டீசல் என்ஜின்களில் எரிபொருளாக உபயோகப்படுத்தப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com