எந்தெந்த மூலிகைப் பொடியில் என்னென்ன பலன்கள் இருக்கு தெரியுமா?

Do you know the health benefits of herbal powders?
Do you know the health benefits of herbal powders?https://www.seithipunal.com

மூலிகைகள் நமது உடலுக்கு பலவித பலன்களைத் தந்து நோய்கள் வராமலும், வந்த நோய்கள் மறைந்து உடல் நலம் பெறவும் பயன்படுகின்றன. நமக்கு ஏற்படும் நோய்களுக்கு ஏற்ப அந்த வகை மூலிகை பொடியை உண்டு வர, நோயின் தீவிரம் குறையும். இனி, எந்தெந்த மூலிகைப் பொடிகளில் என்னென்ன பலன்கள் இருக்கிறது என்பதை இந்தப் பதிவில் அறிவோம்.

அருகம்புல் பொடி: இது இரத்தத்தை சுத்தப்படுத்தும். உடலுக்கு ஊட்டத்தைக் கொடுத்து, சரும நோய்களைப் போக்கும். உடல் எடை குறைப்புக்கு உதவக்கூடிய மூலிகைப் பொடி.

சுக்குப் பொடி: வாய்வு, நீர் ஏற்றம், பல் வலி, காது குத்தல், சுவாசக் கோளாறுகளை நீக்க வல்லது. இதை தண்ணீரில் காய்ச்சி வடிகட்டி அருந்தலாம்.

வல்லாரை பொடி: இப்பொடி சரும பிரச்னைகளை சரிசெய்யும். மலக்கட்டை நீக்கும். ஞாபக சக்தியை அதிகரித்து நரம்புகளை பலப்படுத்தும்.

துளசி பொடி: காய்ச்சலைப் போக்கி உடலின் வெப்பத்தை தணிக்கும். இப்பொடியை வெந்நீருடன் கலந்து குடிக்க சளி, கபம், இருமல் மட்டுப்படும்.

வில்வப் பொடி: குடல் புண், வாந்தி, மயக்கம் தீரும். இதை தண்ணீரில் கலந்து குடித்து வர ஆரோக்கியம் மேம்படும்.

காசினிக்  கீரை பொடி: நீரிழிவு மற்றும் சிறுநீரகக் கோளாறுகளை  தீர்க்க வல்லது. உடலுக்கு எதிர்ப்பு சக்தியை கொடுத்து நோய்கள் வராமல் தடுக்கும்.

மருதாணி பொடி: நகப்புண், சுளுக்கு, கை கால் வலி, எரிச்சல், பித்த வெடிப்பு போன்றவற்றை நீக்கும். கர்ப்பப்பை சம்பந்தமான நோய்களிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது. இப்பொடியை தண்ணீரில் கலந்து உபயோகிக்கலாம்.

ரோஜாப்பூ பொடி: காய்ச்சலைக் போக்கி தாகத்தை தணிக்கும். உடலைக் குளுமைப்படுத்தும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். மேனி அழகை மேம்படுத்தும். சரும அரிப்பை போக்கவல்லது இந்தப் பொடி.

கருவேப்பிலை பொடி: வாய் ருசியின்மை, வயிற்று இரைச்சல்,பித்த காய்ச்சலைப் போக்கும். கூந்தல் வளர்ச்சியை தூண்டி, முடி உதிர்தலை கட்டுப்படுத்தும்.

கடுக்காய் பொடி: மலச்சிக்கல், பசியின்மை, வயிற்று புண் போன்றவற்றை தீர்க்கும்.

தூதுவளை ப் பொடி: இருமல், இளைப்பை போக்கி சுவாசத்தை சீராக்கி சுகம் தருகிறது.

இதையும் படியுங்கள்:
மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டால் ஆயுள் தானே உயரும்!
Do you know the health benefits of herbal powders?

வெந்தயப்பொடி: உடலைக் குளிர்விக்கும். கூந்தலுக்கு பளபளப்பைத் தந்து மென்மையைத் தரும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். இப்பொடி வயிற்று வலியை போக்க வல்லது.

முருங்கைப்பொடி: முருங்கைப் பொடி பலவிதமான பலன்களைத் தந்து உடலை உறுதியாக்குகிறது. இரும்புச் சத்தை அளித்து இரத்த சோகையை போக்கும். உடல் வலி, வாய்வு பிடிப்பைப் போக்கும். ஆண்மை சக்தியை அதிகரிக்க வல்லது.

இப்படி பல மூலிகைப் பொடிகள் நம் நோய்களைப் போக்கி நலம் பெற உதவுகிறது. இந்த மூலிகைப் பொடிகளை தகுந்த சித்த மருத்துவர் ஒருவரின் ஆலோசனையின்பேரில் எடுத்துக்கொள்வது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com