அளவற்ற நன்மைகள் கொண்ட சீதா பழத்தின் ஆரோக்கிய குணம் தெரியுமா?

Do you know the health benefits of sita fruit which have immense benefits?
Do you know the health benefits of sita fruit which have immense benefits?https://tamil.webdunia.com
Published on

சீதா பழத்தின் மணம் மூக்கை துளைக்கும். இந்த பழத்தில் வைட்டமின் சி, பி6 மற்றும் கால்சியம் இரும்பு சத்துக்கள் மற்றும் ஆண்டி ஆக்சிடென்ட் ஆகிய சத்துக்கள் உள்ளன. இது மட்டுமல்லாமல் இந்தப் பழத்தில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது.

சீதா பழத்தின் வெளிப்புற தோல் கடினமானதாக இருக்கும். அதை சாப்பிட முடியாது. உள்ளே வெள்ளை நிற கிரீம் போன்ற சதைப்பிடிப்புக் கொண்ட பழமும் அதனூடாக ஏராளமான கருப்பு நிற கொட்டைகளும் இருக்கும். இந்த விதைகளை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும். சதைப்பகுதி இனிப்பு சுவையைக் கொண்டதாக இருக்கும். சுருக்கமாகச் சொன்னால் ஒரு  கொய்யாவை போன்ற சதைப்பகுதியும் அதே போன்ற சுவையும்தான் சீதா பழத்தில் இருக்கிறது. அதனாலேயே கிராமப்புறங்களில் இதனை சீதா கொய்யா என்பார்கள்.

நீண்ட காலமாக அல்சர் நோயால் அவதிப்படுபவர்கள் சீதா பழம் சாப்பிட்டு வர, அவர்களுக்கு அந்த பாதிப்பு வெகு விரைவில் குணமாகும். அதேபோன்று அசிடிட்டி பிரச்னை இருப்பவர்களும் இந்தப் பழத்தை சாப்பிடலாம். சீதா பழம் நமது உடலில் மெட்டபாலிசநடவடிக்கைகளை ஊக்குவிக்கும். நமது உணவை ஆற்றலாக மாற்றக்கூடிய அம்சம் இதில் உள்ளது.

சீதா பழம் சாப்பிடுவதால் கண் பார்வை மேம்படும், இதய நலன் மற்றும் மூளையின் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கும் சிறந்தது. இந்தப் பழத்தில் சத்துக்கள் நிறைந்துள்ளதால் இது சருமத்திற்கு மிருதுவான தோற்றத்தைத் தரும். சிறு வயதிலேயே கண் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும் குழந்தைகளுக்கு இந்தப் பழத்தை கொடுக்கலாம்.

நம் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதற்கு சீதா பழம் உதவியாக இருக்கிறது. இரத்த சோகை கொண்டவர்கள் கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பெண்களின் இந்த சீதா பழத்தை சாப்பிட்டு வரலாம்.

நிறைய நோய் எதிர்ப்பு சக்தி சீதா பழத்தில் உள்ளது. இது உடல் பருமனை தடுக்கக்கூடியது. இரத்தச் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். புற்றுநோயை தடுப்பதற்குத் தேவையான பண்புகள் சீதா பழத்தில் உள்ளன.

குளிர்காலத்தில் இந்தப் பழம் நிறைய கிடைக்கும். இந்தப் பழம்  சளியை தூண்டும் என்று நினைத்துக் கொண்டு தவிர்த்து விடுவார்கள். ஆனால், தினமும் சாப்பிட வேண்டிய பழம் இது. அதேசமயம் அதிக இயற்கை சர்க்கரை கொண்ட பழம் என்றும் தவிர்க்க வேண்டியதில்லை. சீதா பழங்களில் நார்ச்சத்து இருப்பதால் பிரக்டோஸ் இரத்த சர்க்கரையை எளிதில் உயர்த்தாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது இரத்தத்தில் குளுக்கோஸை மெதுவாகவே வெளியிடுகிறது.

‘கஸ்டர்ட் ஆப்பிள்’ என்று சொல்லக்கூடிய சீதா பழத்தில் அதிக அளவு மெக்னீசியம் இருப்பதால் உடலில் நீர்ச்சத்து மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. அது மட்டுமின்றி, இது மூட்டுகளில் உள்ள திரவம் மற்றும் அமிலத்தை நீக்குகிறது. இதன் விளைவாக வீக்கத்தை குறைக்கிறது. கீல்வாதம் மற்றும் கீல்வாதத்தின் அபாயத்தை குறைக்கிறது. எனவே, குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய மூட்டு வலி, எலும்பு பலவீன பிரச்னைகளுக்கு சீதா பழம் சிறந்த நிவாரணி எனலாம். சீதா பழத்தை அடிக்கடி சாப்பிடுவதால் தசைகளின் பலவீனத்தை எதிர்த்துப் போராட முடியும். அதோடு, எலும்புகளை உறுதிப்படுத்தும் கால்சியமும் சீதா பழத்தில் அதிகமாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
மலச்சிக்கல் முதல் மூட்டுவலி வரை நிவாரணம் தரும் பனங்கிழங்கு!
Do you know the health benefits of sita fruit which have immense benefits?

உடல் மெலிந்து காணப்படுபவர்கள், உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக சீதா பழத்தை சாப்பிடலாம். காரணம் இது ஒரு கலோரி நிறைந்த பழமாகும். 100 கிராம் சீதா பழத்தில் கிட்டத்தட்ட 90 கலோரிகள் இருக்கிறது. தேவைப்பட்டால் ஸ்மூத்தி போன்றவற்றில் சேர்த்து சாப்பிட்டால் இரட்டிப்புப் பலன் கிடைக்கும்.

உடம்பில் ஊளை சதை உள்ளவர்கள் தொடர்ந்து சீதா பழம் சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் சேராது. சீதா பழம் தொடர்ந்து சாப்பிடுவது நினைவாற்றலை அதிகரிக்கும். குடல் பாதுகாப்பையும் தரக்கூடியவை இந்த சீதா பழங்கள். சிறிது வெந்தயத்தை ஊற வைத்து அதனுடன் சீதா பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆறி விடும். சீதா பழத்துடன் சிறிது இஞ்சிச்சாறு, கருப்பட்டி சேர்த்து உண்டால் பித்தம் நீங்கும். அல்சர் பிரச்னைக்கும் ஆஸ்துமா பிரச்னைக்கும் தீர்வாக மட்டுமல்லாமல், கண் பார்வை கூர்மை பெறவும் சீதா பழம் உதவுகிறது.

சீதா பழத்தை உணவுக்குப் பிறகு சாப்பிடக்கூடாது. அதேபோல், உணவுடன் சேர்த்தும் சாப்பிடக் கூடாது. இந்தப் பழத்தை காலை 11 மணிக்கு மேல், மாலை 4 மணிக்குள் சாப்பிட வேண்டும். சீதா பழத்தை மற்ற பழங்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. சீதா பழத்தை ஜூஸாக சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிட்டால்தான் பலன் கிடைக்கும். ஜூஸாக சாப்பிடும்போது சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com