டிராகன் பழத்தை சாப்பிட வேண்டியதன் அவசியம் என்ன தெரியுமா?

டிராகன் பழத்தை சாப்பிட வேண்டியதன் அவசியம் என்ன தெரியுமா?
Roxiller
Published on

வர்ச்சிகரமான பழ இனங்களுள் ஒன்றான டிராகன் பழத்தின் பூர்வீகம் மெக்ஸிகோ  என அறியப்படுகிறது. ஆரம்பத்தில் அமெரிக்கா முழுவதும் பரவி, இப்போது உலகம் முழுவதும் இப்பழம் விளைவிக்கப்படுகிறது. இந்தியாவிலும் இதனை பலர் விரும்பி ருசிக்க பழகி விட்டார்கள். இனி, டிராகன் பழத்தை சாப்பிட வேண்டியதன் அவசியத்தைத் தெரிந்து கொள்வோம்.

1. டிராகன் பழத்தில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன. அவை உடலின் செல்களை சேதப்படுத்தும், ‘ஃப்ரீ ரேடிக்கல்’களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் இவை வழி வகுக்குகின்றன.

2. இந்தப் பழத்தில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தக்கூடியது. நோய் தொற்றுகளுக்கு எதிராகப் போராடி உடல் பலவீனம் அடைவதைத் தடுக்கக்கூடியது.

3. டிராகன் பழத்தில் உள்ளடங்கி இருக்கும் நார்ச்சத்து செரிமான செயல்பாடுகளையும், குடல் இயக்கத்தையும் மேம்படுத்த உதவும்.

4. இந்தப் பழத்தில் நிறைந்திருக்கும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து சருமத்தை பாதுகாக்க வழிவகை செய்யும். விரைவிலேயே வயதான அறிகுறிகள் எட்டிப் பார்ப்பதை தடுக்கும்.

5. டிராகன் பழத்தில் இருக்கும் நார்ச்சத்துக்கள் மற்றும் மோனோ சாட்சுரேட்டட் கொழுப்புகள் ஆரோக்கியமான கொழுப்பின் செயல்பாடுகளை ஊக்குவிக்க உதவும். இது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதனால் இதய நோய் அபாயங்களைக் குறைக்கும்.

6. இப்பழத்தில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், வெப்ப காலங்களின்போது உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்க துணை புரியும். உடற்பயிற்சி செய்த பிறகு உடலை நீரேற்றமாக வைத்திருப்பதற்கு டிராகன் பழம் சிறந்த தேர்வாக அமைகிறது.

7. டிராகன் பழத்தில் கலோரிகளின் குறைவு. ஆனால் வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

இந்தப் பழத்தில் அடங்கியுள்ள ஊட்டச்சத்து  விகிதம்: நார்ச்சத்து - 0.9 கிராம், கால்சியம் - 8.8 கிராம், கொழுப்பு - 0.61 கி., கரோட்டின் - 0. 012 கி., நியாஸின் - 0. 430 மி.கி., பாஸ்பரஸ் - 36.1 மி.கி., புரோட்டின்- 0.229 கி., தண்ணீர் - 83.0 கி., இரும்பு - 0.65 மி.கி. இவ்வளவு ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ள டிராகன் பழத்தை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com