Lemon juice and pepper powder
Lemon juice and pepper powder

உணவுடன் லெமன் ஜூஸ் மற்றும் கருப்பு மிளகுத் தூள் சேர்த்து உண்பதின் ரகசியம் தெரியுமா?

Published on

நாம் உண்ணும் உணவுகளை சமைக்கும் முறையிலிருந்து, அவற்றிலிருந்து நாம் பெறும் ஊட்டச் சத்துக்களின் அளவு மாறுபடும். எண்ணெயில் பொரித்தெடுக்கும் உணவுகளிலிருந்து கிடைக்கும் சத்துக்களை விட, உணவை நீரிலோ ஆவியிலோ வேக வைத்து சமைக்கும்போது அவற்றிலிருந்து கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் அதிகமாகும். லெமன் ஜூஸ் மற்றும் கருப்பு மிளகுத் தூள் போன்ற சில குறிப்பிட்ட பொருள்களை சேர்த்து உணவை உட்கொள்ளும்போது இன்னும் சில நன்மைகள் கூடுதலாகக் கிடைக்கும்.

லெமன் ஜூஸில் உள்ள சிட்ரிக் ஆசிட், கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை மெதுவாக ஜீரணிக்கச் செய்து அதிலிருந்து வெளிப்படும் குளுக்கோஸை மெதுவாக இரத்தத்தில் கலக்கச் செய்யும். இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு உயராமலும், இன்சுலின் சென்சிடிவிட்டியை அதிகரிக்கச் செய்யவும் முடியும். இதிலுள்ள வைட்டமின் C யானது வீக்கங்களையும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸையும்  குறைக்க உதவும்.

கருப்பு மிளகில் உள்ள பெபெரைன் என்ற  பொருள் மெட்டபாலிஸம் விரைவாக நடைபெறவும், ஊட்டச் சத்துக்கள் சிறந்த முறையில் உடலுக்குள் உறிஞ்சப்படவும் உதவும்.

இதையும் படியுங்கள்:
இந்தியப் பெருங்கடலும், ராஜேந்திர சோழனின் கடற்படையும்: ஒரு அலசல்!
Lemon juice and pepper powder

லெமன் ஜூஸ் மற்றும் கருப்பு மிளகு உணவின் சுவையை கூட்டுவதோடு மட்டுமின்றி, ஜீரணத்தை சிறப்பாக்கி ஊட்டச் சத்துக்கள் உறிஞ்சப்படவும், இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும் உதவுகின்றன.

logo
Kalki Online
kalkionline.com