கால் மேல் கால் போட்டு அமர்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி தெரியுமா?

கால் மேல் கால் போட்டு அமர்தல்
கால் மேல் கால் போட்டு அமர்தல்https://theconversation.com
Published on

நிறைய பேர் நாற்காலியில் அமரும்போது கால் மேல் கால் போட்டு அமருவார்கள். இது சில உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும். அது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கால் வலி: ஒரு நபர் நாற்காலியில் அமர்ந்திருக்கும்போது கால் மேல் கால் போட்டுக்கொண்டு நீண்ட நேரம் அமர்ந்தால் அவரது உடலில் ஏற்படும் பாதிப்புகளில் முக்கியமானது கால்களுக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படுவதுதான். அதனால் கால்கள் மற்றும் தொடைப் பகுதியில் உணர்ச்சியின்மை மற்றும் கால் வலிக்கு வழி வகுக்கும்.

மூட்டு வலி: ஒரு காலின் மேல் இன்னொரு காலை போட்டு அமர்ந்திருப்பதால் இடுப்பு மற்றும் முழங்கால் மூட்டுகளில் அதிக அழுத்தம் ஏற்படும். இதனால் மூட்டுவலி ஏற்படும். மேலும் மூட்டு விறைப்பிற்கும் வழிவகுக்கும்.

தோரணை பிரச்னைகள்: கால் மேல் கால் போட்டு அமர்வது சமநிலையற்ற தோரணைக்கு வழி வகுக்கும். காலப்போக்கில் இது உடலின் சீரற்ற எடைக்கும், முதுகு மற்றும் கழுத்து வலியையும் ஏற்படுத்தும்.

நரம்புச் சுருக்கம்: நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்திருப்பதால் கால் நரம்புகளில் சுருக்கங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. கால்களில் உள்ள நரம்புகளில் ஏற்படும் அழுத்தம் காரணமாக நரம்புகள் வீங்கி  வீக்கத்திற்கு வழிவகுக்கும்.

தசை ஏற்றத்தாழ்வு: கால் மேல் கால் போட்டு அமருவதால் சில தசைகளை மட்டும் அதிகமாகவும் மற்றவை குறைவாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இது தசை சமநிலையின்னைக்கு வழிவகுக்கும். குறிப்பாக, இடுப்பு மற்றும் கீழ் முதுகுப் பகுதிகளில். இது முதுகுத்தண்டின் இயற்கையான வளைவை பாதிக்கும். மேலும், நாள்பட்ட கீழ் முதுகு வலிக்கு வழிவகுக்கும். மேலும், பின்புற இடுப்பு சாய்வை ஏற்படுத்தும்.

செரிமான பாதிப்பு: கால் மேல் கால் போட்டு அமருவது வயிற்றுப்பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இது செரிமானத்தை பாதிக்கும் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளுக்கு பங்களிக்கும்.

இதையும் படியுங்கள்:
பிரிந்த தம்பதியரை ஒன்று சேர்க்கும் தழுவக் குழைந்த ஈசன் அருள்பாலிக்கும் தலம்!
கால் மேல் கால் போட்டு அமர்தல்

ஆழமற்ற சுவாசம்: இது உதரவிதான சுவாசத்தை கட்டுப்படுத்தும். ஆழமற்ற சுவாசத்திற்கு வழிவகுக்கும். கவலை உணர்வுகளுக்கு இட்டுச் செல்லும். ஒட்டுமொத்த ஆக்சிஜன் உட்கொள்ளலை குறைக்கும்.

மனச்சோர்வு: இந்த நிலையில் நீண்ட நேரம் அமர்வதால் ஏற்படும் அசௌகர்யம்  மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். உடல் அசௌகரியத்தை தணிக்க மூளையை சரி செய்யுமாறு தொடர்ந்து சிக்னல் தரும்.

உளவியல் ரீதியான பாதிப்புகள்: உடல் அசௌகரியத்தை பற்றிய கவனம் இருப்பதால் உரையாடல்களில் முழுமையாக ஈடுபடும் திறன் குறையலாம். அதனால் ஒட்டுமொத்த திருப்தியும் குறையும்.

பொதுவாக, கைகளை கட்டாமல், கால் மேல் கால் போட்டும் அமராமல் நிமிர்ந்த தோரணையோடு நேரடி கண் தொடர்பு கொண்ட சிறந்த உடல் மொழி நம்பிக்கையை காட்டுகிறது. கால்களை தரையில் உறுதியாக வைத்துக்கொண்டு உட்கார்ந்து இருப்பது ஒரு மனிதனின் மன உறுதியையும் தன்னம்பிக்கையும் வெளிப்படுத்துகிறது. சில கலாசார சூழ்நிலைகளில் கால் மேல் கால் போட்டு அமருவது மரியாதைக் குறைவைக் குறிக்கும்.

ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் உடல் அசௌகர்யத்தோடு மனநலனையும் பாதிக்கும். அதனால் அதிகரித்த மனப்பதற்றம் எரிச்சலுக்கு வழிவகுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com