வைட்டமின் A குறைபாட்டால் உண்டாகும் நோய் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

வைட்டமின் A குறைபாடு
வைட்டமின் A குறைபாடு
Published on

ம் உடல் முழு ஆரோக்கியத்துடன் விளங்க நாம் உட்கொள்ளும் உணவில் கார்போஹைட்ரேட்ஸ், புரதம், கொழுப்பு, வைட்டமின் மற்றும் மினரல்கள் போன்றவை சரியான விகிதத்தில் இருப்பது அவசியம். இதில் ஏதாவது குறை ஏற்பட்டால் உடல் ஆரோக்கியத்திலும் குறைபாடு உண்டாகும்.

உடலில் மெட்டபாலிசம் சிறப்பாக நடைபெறவும், பார்வைத் திறன் மற்றும் செல்களின் வளர்ச்சி ஆரோக்கியமுடன் இருக்கவும் வைட்டமின் A மிகவும் தேவையான ஓர் ஊட்டச் சத்தாகும். வைட்டமின் A நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் இன விருத்தி பெருக்கத்திற்கும் உதவி புரியும். வைட்டமின் A சத்து உடலில் குறையும்போது அதன் அறிகுறியாக உடலில் தோன்றும் 6 முக்கிய ஆரோக்கியக் குறைபாடுகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

1. உடலில் வைட்டமின் A சத்து குறையும்போது, குறைந்த வெளிச்சம் உள்ள அல்லது இருட்டான இடங்களில் இருக்கும்போது பார்வை சரிவரத் தெரியாது. இக்கோளாறை 'நைட் ப்ளைன்ட்னஸ்' என்பர்.

2. கண்களில் கண்ணீர் உற்பத்தியாகும் திறன் குறைந்து கண்கள் வறட்சியுடன் காணப்படும். வைட்டமின் A குறைபாடே இதன் காரணம் என உணர்ந்து, அதை நிவர்த்தி செய்யும் செயலில் உடனே இறங்குவது அவசியம்.

3. அடிக்கடி நெஞ்சில் அல்லது தொண்டையில் தொற்று நோய் கிருமிகளால் தொந்தரவு ஏற்படுமாயின் அது உடலில் வைட்டமின் A குறைந்திருப்பதற்கான அறிகுறியாகும்.

4. சருமத்தின் பாதுகாப்பிற்கு உதவும் செல்களை உற்பத்தி செய்வதில் வைட்டமின் A பங்களிப்பு அதிகம். உடலில் வைட்டமின் A சத்து குறையும்போது சருமம் வறட்சியுறும்; சருமத்தில் அரிப்பு மற்றும் வீக்கமும் உண்டாகும்.

இதையும் படியுங்கள்:
கர்ணன் ஏன் இடது கையால் தானம் அளித்தான்?
வைட்டமின் A குறைபாடு

5. குழந்தைகளின் உடலில் வைட்டமின் A சத்து குறையும்போது, அவர்களின் உடல் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் குறைபாடு உண்டாகும்.

6. பெண்கள் கருவுறுதலில் கால தாமதம் ஏற்பட்டாலோ அல்லது அவர்கள் இது சம்பந்தமாய் வேறு ஏதாவது பிரச்னைகளை சந்திக்க நேர்ந்தாலோ அதற்கான காரணங்களில் ஒன்று வைட்டமின் A சத்து குறைபாடாக இருக்க வாய்ப்புண்டு.

மேற்கூறிய ஆரோக்கியக் குறைபாடுகள் உடலில் தோன்றும்போது வைட்டமின் A சத்தைத் தரக்கூடிய கேரட், சிவப்பு குடைமிளகாய், பசலைக் கீரை, ஸ்வீட் பொட்டட்டோ, மாம்பழம், பப்பாளி, ஆப்ரிகாட், காண்டலூப் போன்ற காய்கறி மற்றும் பழ வகைகளை அடிக்கடி உட்கொண்டு உடல் நலம் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com