மழைக்காலத்தில் அவசியம் வீட்டில் இருக்க வேண்டிய 3 பொருட்கள் எவை தெரியுமா?

Benefits of ginger and pepper
Benefits of ginger and pepper
Published on

ழைக்காலம் தொடங்கிவிட்டது. இந்தக் காலகட்டத்தில் நம் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய மூன்று பொருட்கள் இஞ்சி, மிளகு, சுக்கு ஆகியவையாகும். மழைக்காலத்தில் இந்த மூன்று பொருட்களின் அத்தியாவசியத் தேவைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

மழைக்காலத்தில் இஞ்சி நமக்குப் பல வகைகளில் உதவுகிறது. இஞ்சி சாறை கஷாயம் செய்து குடித்து வந்தால் சளி மற்றும் தொண்டை வலியில் இருந்து விடுபடலாம். ஆஸ்துமாவிற்கு ஏற்ற மருந்தாக இஞ்சி உள்ளது. இது உமிழ் நீரினை அதிக அளவு சுரக்க வைக்கும் திறனுடையது. இஞ்சி டீயில் வைட்டமின் சி, மெக்னீசியம், கனிமச்சத்துக்கள் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

இஞ்சி உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. சுவாசக் கோளாறுகள் மற்றும் மூட்டு வலியில் இருந்து விடுபட உதவுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை போக்கும் சக்தி உடையது.  இஞ்சி டீ இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் மாரடைப்பு நோயிலிருந்து நம்மைக் காக்கிறது. தேன் மற்றும் புதினாவை இஞ்சிச்சாறுடன் கொதிக்க வைத்த தண்ணீரை குடித்து வந்தால் ஆரோக்கியமான உடல் நலத்தைப் பெறலாம். சளிக்கும் தலை பாரதத்திற்கும் இஞ்சி சாறு நெத்தியில் பற்றி போடலாம். இஞ்சியை கண்டால் நோய்கள் அஞ்சி ஓடும் என்பது மருத்துவ மொழி. இஞ்சியை எந்த உணவுடன் சேர்த்தாலும் சுவையை கூட்டும் தன்மையுடையது.

மிளகு நாள்பட்ட சளி, இருமல் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு தருவதாகும். ஆஸ்துமா உள்ளவருக்கு மூச்சிரைப்பு வராமல் தடுக்கும். மிளகை தீயில் சுட்டு அதன் புகையை சுவாசித்தால் தலைவலி, மூக்கடைப்பு நீங்கும். பாலில் சிறிதளவு மிளகு பொடி, மஞ்சள் பொடி சேர்த்து வற்றும் வரை கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் தொண்டை கட்டுதல் குரலில் பிரச்னை இருந்தால் சரியாகும்.

மிளகு பொடியை நீரில் கரைத்துக் குடித்தால் வாயு தொந்தரவு நீங்கும். மிளகு ரசம் செய்து சாப்பிட்டாலும் இந்த பிரச்னை வராது. தொடர்ச்சியாக மிளகு சாப்பிட்டு வருவோருக்கு நீர் கோர்ப்பு இருந்தால் குணமாகும். குழந்தைகளுக்கு ஆறு மாதமான பிறகு புழுங்கல் அரிசி அல்லது கேழ்வரகு கஞ்சி கொடுத்து சாப்பிடப் பழக்கும்போது அதனுடன் ஓமம், சீரகம், மிளகு சேர்த்துக் கொடுப்பது அவர்கள் ஆரோக்கியமாக வளர உதவும். தினமும் ஏதாவது ஒரு வகையில் உணவுடன் மிளகு சேர்ப்பது நன்மை தரும். சூப்புகளிலும் மிளகு பொடி சேர்த்து பருகலாம்.

‘சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை’ என்பது சொல்மொழி. அவ்வளவு சிறப்பு வாய்ந்த சுக்கு மழைக்காலத்தில் மக்களுக்கு மகத்துவமான மருத்துவப் பயன்களைத் தருகிறது. சுக்கை வெல்லத்துடன் சாப்பிட விக்கல் நிற்கும். சுக்கு கஷாயம் இருமலைப் போக்கும். சுக்கு சேர்த்து காய்ச்சப்பட்ட பால் தலைவலியை குறைக்கும். சுக்கை தட்டி போட்டு வென்னீர் தயார் செய்து குளிக்க தலையில் நீர் கோவை, தலைவலி தீரும்.

இதையும் படியுங்கள்:
மறந்தும் இந்த 8 வகை உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்!
Benefits of ginger and pepper

சுக்கு ஜலதோஷத்திற்குக் காரணமான வைரஸை தாக்கி அழிக்கிறது. தலைவலியை போக்குகிறது. இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. சுக்கை அடிக்கடி பயன்படுத்தி வந்தால் உடல் வலுவாகும். இளமையாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ முடியும். நீரிழிவு நோய் வராது. நரம்புகள் வலிமை பெறும். உடல் சுறுசுறுப்பாகும்.

சிறிது சுக்குடன் ஒரு வெற்றிலை சேர்த்து மையாக அரைத்து தின்றால் வாயு தொல்லை நீங்கும். சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவற்றை இடித்து பொடியாக்கி கஷாயம் வைத்துப் பருகி வர கடுஞ்சளி மூன்றே நாளில் குணமாகிவிடும். சுக்குடன் சிறிது பால் சேர்த்து மையாக அரைத்து நன்கு சூடாக்கி இளஞ்சூடான பதத்திற்கு வந்த பிறகு வலியுள்ள கை, கால், மூட்டுகளில் தடவ, மூட்டு வலிகள் முற்றிலும் நீங்கிவிடும்.

மழைக்காலத்தில் நமக்கு ஏற்படும் சளி, ஜலதோஷம், இருமல், மூட்டு வலி போன்றவற்றை குணப்படுத்த இம்மூன்று பொருட்களையும் பயன்படுத்தி பயன் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com