தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் உடலில் என்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?

Do you know what changes happen in the body if you drink orange juice daily?
Do you know what changes happen in the body if you drink orange juice daily?https://stvincents.org

கோடை காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதை சமாளிக்க நம் உணவில் கண்டிப்பாக ஜூஸ் வகைகளை சேர்க்க வேண்டிய அவசியமுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை உடலில் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள ஜூஸ் மிகவும் முக்கியமாகும். அதிலும் தினமும் ஆரஞ்சு ஜூஸ் பருகுவதால், உடல் இயக்கம் சுறுசுறுப்புடன் நடைபெற உதவுகிறது. உடலில் சோர்வை விரட்டி மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ளும்.

காலை உணவு உண்ட பிறகோ அல்லது உடற்பயிற்சி செய்த பிறகோ ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். ஆரஞ்சு ஜூஸில் ஆன்டி ஆக்ஸிடன்ட், அழற்சியை போக்கும் தன்மை, இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும் ஆற்றல் உள்ளது.

மூளையில் உள்ள அறிதிறனை அதிகரிக்கும், இதய நோயை வராமல் இருக்க உதவும், கேன்சர் வராமல் தடுக்கும் அருமருந்தாக உதவும், வளர்சிதை மாற்ற நோய்க்குறிகளைப் போக்கும்.

ஆரஞ்சில் அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட், வைட்டமின் சி, பொட்டாசியம் போன்றவை உள்ளதால் சிறுநீரகத்தில் கல் வராமல் தடுக்கும். ஆரஞ்சு ஜூஸ் தினமும் குடிப்பதால் சருமத்தில் கருமை நீங்கி முகம் பொலிவு பெறும். கரும்புள்ளிகள், தழும்புகள் நீங்கி பளபளப்பாகும். கொலாஜனை அதிகரித்து, முக சுருக்கத்தை நீக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆரஞ்சில் உள்ள வைட்டமின் சி இருமல், காய்ச்சல் போன்றவற்றை போக்குகிறது. கோடைக்காலத்தில் ஆரஞ்சு ஜூஸ் பருகுவதால், கதிர்வீச்சு பிரச்னையிலிருந்து சருமத்தை காக்க உதவுகிறது. அதில் கொழுப்பு துளியும் இல்லை என்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஆரஞ்சு ஜூஸை கண்டிப்பாக எடுத்துக்கொள்வது நல்லதாகும்.

ஆரஞ்சில் கால்சியம் சத்து உள்ளதால் எலும்புக்கு வலு சேர்க்கும். இதில் நரின்கைன்,ஹெஸ்பிரிதின் போன்ற பிளாவோனாய்டுகள் இருப்பது மூட்டு வலிக்கு நிவாரணம் தரக்கூடியதாகும்.

இதையும் படியுங்கள்:
‘நோ’ சொல்ல கத்துக்கிட்டா வாழ்வே இன்பமயமாகும்!
Do you know what changes happen in the body if you drink orange juice daily?

தினமும் ஆரஞ்சு ஜூஸை 240 மில்லி லிட்டரே குடிக்க வேண்டும். நல்ல ஆரஞ்சு பழங்களை பயன்படுத்தி ஜூஸ் போட்டு குடிக்கவும். செயற்கையாக பாட்டில்களில் அடைத்து வைத்திருப்பதை அருந்துவது உடல் நலனுக்கு நல்லதில்லை. இரண்டு தேக்கரண்டி ஆரஞ்சு ஜூஸ்,சந்தனம் ஒரு தேக்கரண்டி, தேன் ஒரு தேக்கரண்டி, பால் ஒரு தேக்கரண்டியை சேர்த்து குழைத்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனால் முகம் பளபளப்பாக இருக்கும். இதுவே ஆரஞ்சு பேஸ் மாஸ்க் செய்யும் முறையாகும்.

எந்த ஜூஸை அருந்த வேண்டும் என்றாலும் காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது நல்லதில்லை. உணவு அருந்திய பின்பு எடுத்துக்கொள்வதே சிறந்ததாகும். இரவில் ஜூஸ் குடிப்பதை தவிர்ப்பது நல்லதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com