நாம் உயிர் வாழத் தேவையான ஆக்சிஜனை, உள்ளிழுக்கும் காற்றிலிருந்து பிரித்தெடுத்து இரத்தத்தில் கலக்கச் செய்யும் வேலையை திறம்படச் செய்து கொண்டிருப்பது நுரையீரல். நுரையீரல் முழு ஆரோக்கியத்துடன் செயல்பட, நாம் உண்ணும் உணவு சத்து நிறைந்ததாய் இருப்பது அவசியம். அவ்வாறான உணவுகள் எவை என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த சால்மன், டிரௌட் போன்ற மீன் வகைகளை உண்ணும்போது அவற்றிலிலுள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமானது நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, மூச்சுக் குழாய், மூக்கு, மூச்சுப் பாதை போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட அனைத்து உறுப்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
புரோக்கோலி உண்பதால் அதிலுள்ள வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் தீங்கு விளைவிக்கக்கூடிய ஃபிரி ரேடிக்கல்களை அழித்து, நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன.
மஞ்சளில் அதிகளவு ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் உள்ளன. மஞ்சளை உணவில் சேர்த்துக்கொள்வதால் அதிலுள்ள ஆக்ட்டிவ் காம்பௌண்டான குர்குமின் வீக்கத்தைக் குறைத்து மொத்த நுரையீரல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.
புளூ பெரி, பிளாக் பெரி, ராஸ் பெரி போன்ற பழங்களில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகமுள்ளன. அவை வீக்கத்தையும், ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸையும் குறைக்கின்றன.
பாதாம், வால்நட், சியா விதை, ஃபிளாக்ஸ் விதை ஆகியவற்றில் மக்னீசியம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் உள்ளன. அவை நுரையீரல் சம்பந்தப்பட்ட அனைத்து உறுப்புகளின் ஆரோக்கியம் காக்க உதவி புரிகின்றன. மேலும், இவற்றிலுள்ள வைட்டமின் சத்துக்கள் வீக்கம் குறைத்து வேறு பல நன்மைகளையும் தருகின்றன.
இவ்வாறான ஊட்டச் சத்துக்கள் நிறைந்த உணவுகளை அடிக்கடி உட்கொண்டு நுரையீரல் ஆரோக்கியம் காப்போம்.