களாக்காய் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?

Do you know what happens to the body if you eat Kalakaai
Do you know what happens to the body if you eat Kalakaai

ளாக்காய் கிடைக்கும் சீசன் இதுவென்பதால், தற்போது மார்க்கெட்டில் அதிக அளவு விற்பனைக்கு வரும். பார்ப்பதற்குதான் இது சிறியதாக இருக்கும். ஆனால், இதன் ஆரோக்கிய நன்மைகளோ மிகவும் பெரிது. களாக்காயில் உடலுக்குத் தேவையான ஆரோக்கிய விஷயங்கள் என்னென்ன இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

ஆஸ்துமா நோயிலிருந்து சரும நோய்கள் வரை குணப்படுத்தும் வல்லமை கொண்டது களாக்காய். இந்தக் காயில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் அடிவயிற்று வலியை சரி செய்கிறது. உலர வைத்த இதன் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் ஜீரணமின்மை, வாயு மற்றும் வயிறு வீக்கம் போன்ற பிரச்னைகளை சரி செய்கிறது.

இந்தப் பழத்தில் உள்ள பெக்டின் என்ற சத்து ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. இதிலுள்ள கரையக்கூடிய நார்ச்சத்துகள் ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். மேலும், பசியை ஏற்படுத்தும். இதில் போதுமான அளவு வைட்டமின் சி சத்து இருப்பதால் காய்ச்சலின் வீரியத்தை குறைக்கிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் காய்ச்சலுக்கு எதிரான கிருமிகளை எதிர்த்துப் போரிடுகிறது. 10 மில்லி கிராம் அளவு இந்தப் பழத்தை எடுத்துக் கொண்டாலே போதும் காய்ச்சல் தானாகக் குறைந்து விடும்.

களாக்காயிலுள்ள மக்னீசியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள், ட்ரைப்டோஃபோன் போன்றவை செரோடோனின் சுரப்பிற்கு உதவுகிறது. இதனால் ஒட்டுமொத்த மூளையின் செயல் திறனும் அதிகரிக்கிறது. களாக்காயை ஜூஸ் போட்டு குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

இதையும் படியுங்கள்:
இந்த 5 விஷயங்களை உங்கள் உறவினர்களிடம் தெரியாமல் கூட சொல்லி விடாதீர்கள்! 
Do you know what happens to the body if you eat Kalakaai

களாக்காய்க்கு இயற்கையாகவே உடலில் உள்ள அழற்சியை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்து போராடும் வலிமை உள்ளது. மேலும், அஸ்காரிஸ், ஈறுகளில் இரத்தம் வடிதல், உட்புற உறுப்புகளில் இரத்தம் வடிதல் போன்ற பிரச்னைகளையும் இது சரி செய்கிறது. அதீத தாகம் மற்றும் பசியற்ற தன்மையை போக்கவும் இது உதவுகிறது. சரும நோய்கள், அரிப்பு, அல்சர் மற்றும் எபிலப்ஸி போன்ற நோய்களுக்கும் இது மருந்தாகிறது.

இந்தக் காயை அதிக அளவிலோ அல்லது நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்தாலோ பாலியல் ஆரோக்கியம் பாதிக்கப்படக் கூடும். அதிகளவு எடுத்துக் கொள்ளும்போது அசிடிட்டி பிரச்னையை சந்திக்க நேரிடலாம். அதேபோல், பழுக்காத பழங்கள் சில சமயம் எரிச்சலை ஏற்படுத்தலாம். இரத்த சம்பந்தமான நோய்களை இது மேலும் பெரிதாக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com