Do you know what is 'Netra Basti' method?
Do you know what is 'Netra Basti' method?https://yogaayurvedacentre.com

‘நேத்ரா பஸ்தி’ முறை என்றால் என்ன தெரியுமா?

Published on

‘நேத்ரா’ என்றால் கண்கள் என்று பொருள்.  ‘பஸ்தி’ என்றால் சுத்தம் அல்லது குளிப்பது எனப் பொருள்படும். ஆயுர்வேதத்தில், ‘நேத்ரா பஸ்தி’ முறை என்றால் கண்களை சுத்தப்படுத்தி, கண் மற்றும் கண்களைச் சுற்றியுள்ள சருமத்தின் வீக்கம் மற்றும் வறட்சியை தடுப்பதற்காகவும் கண் சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையாகவும் இது பயன்படுகிறது.

நேத்ரா பஸ்தி சிகிச்சை செய்யும் முறை: நோயாளி உணவு உண்டபின் 4 மணி நேரம் கழித்து தூசி மற்றும் புகை இல்லாத நல்ல வெளிச்சம் உள்ள காற்றோட்டமான ஒரு அறையில் படுக்க வைக்கப்படுவர்.

ஆர்கானிக் மாவினால் செய்யப்பட்ட வளையம் கண்களைச் சுற்றியும் கண் இமைகளின் மேலும் வைக்கப்படும். பின்பு அதில் புதிய இளம் சூடாக உருக்கப்பட்ட நெய்யை ஊற்ற வேண்டும். நோயாளி கண்களைத் திறந்து மூடவேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரை ஊற்றி சிகிச்சை செய்யப்படுகிறது.

சிகிச்சையின் பலன்கள்:

1. கண் சோர்வு, வலியை போக்குகிறது.

2. கண்ணின் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தி கண் பார்வையை மேம்படுத்துகிறது.

3. கணினியில் தொடர்ந்து வேலை செய்பவர்கள், இயந்திரங்களை இயக்குபவர்கள் நீண்ட நேரம் வாகனம் ஓட்டுபவர்களுக்கு இது சிறந்த சிகிச்சை ஆகும்.

4. கண்ணாடி அணிந்திருப்பவர்கள் படிப்படியாக பவர் குறைந்து கண்ணாடியை நாளடைவில் கழற்றி விடலாம்.

5. சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு இந்த சிகிச்சை முறை நல்ல பலனை தரும். கண்களுக்கு நல்ல பார்வையை தரும்.

இதையும் படியுங்கள்:
வாசனை திரவியத்தால் இத்தனை நன்மைகளா? இது தெரியாம போச்சே!
Do you know what is 'Netra Basti' method?

6. வறண்ட கண்கள், வறட்சியான கண் இமைகள் முதலியவை சரிப்படுத்தப்பட்டு ஈரப்பதம் உள்ள மற்றும் தெளிவான பார்வை கிடைக்கும்.

7. கண்களுக்கு அடியில் உள்ள கருவளையங்கள் சரி செய்யப்படுகிறது.

8. உலர்ந்த கண் பிரச்னை சரி செய்யப்படுகிறது. கண் இமைகளில் இருந்து முடி உதிர்தல் நிற்கிறது.

9. தொலைக்காட்சி பார்ப்பது, கம்ப்யூட்டர் திரையை அதிக நேரம் பார்ப்பது, தூசு போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்கிறது. கண் சிவத்தலை தடுக்கிறது.

10. கண்ணீர் அழுத்த நோய் எனப்படும் க்ளூக்கோமா நோய் வராமல் தடுக்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com