அனைத்து சத்துக்களும் கொண்ட ஒரே பழம் எது தெரியுமா?

Do you know what is the only fruit that contains all the nutrients?
Do you know what is the only fruit that contains all the nutrients?https://www.youtube.com
Published on

ரே பழத்தில் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இருக்கின்றன என்றால் அது அத்திப் பழத்தில்தான். இது உடலின் பல்வேறு நோய்களுக்கும் தீர்வாக உள்ளது. கால்சியம், புரதம், கலோரி என தினசரி உடலுக்குத் தேவைப்படும் அனைத்து சத்துக்களையும், எல்லா வயதினருக்கும் ஏற்ற வகையில் கொண்டுள்ள பழம் அத்தி. உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகள், எலும்பு பலவீனமானவர்கள், எடையை குறைக்க நினைப்பவர்கள் என அனைவருக்கும் ஏற்றதாக இந்தப் பழம் உள்ளது.

அதிக உப்பினால் ஏற்படும் உயர் இரத்த அழுத்த நோயிலிருந்து அத்திப்பழத்தில் உள்ள பொட்டாஷியம் காப்பாற்றுகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை போக்கி, விரைவில் செரிமானத்தை சீராக்கக் கூடியது. அத்திப் பழத்தில் உள்ள கால்சியம், எலும்புகளையும், பற்களையும் உறுதியாக்குகிறது. இதில் உள்ள இரும்புச்சத்து இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.

வைட்டமின் ஈ முதியவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாட்டை சரியாக்குகிறது. அத்திப் பழ விதையில் உள்ள துத்தநாகம், தாமிரம் போன்ற தாதுக்கள் வெண்புள்ளி, சரும நிறமாற்றம் போன்ற நோய்களை குணப்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
தசைகள் பலவீனமாக உணர்கிறீர்களா? இந்த சத்து குறைபாடாக இருக்கலாம்.. ஜாக்கிரதை! 
Do you know what is the only fruit that contains all the nutrients?

கல்லீரல் வீக்கம், ஆண்மைக்குறைவு, மலச்சிக்கல், மாதவிடாய் பிரச்னைகளுக்கு அத்திப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல குணம் கிடைக்கும். உலர் அத்திப் பழத்தை வினிகரில் ஊற விட்டு சாப்பிட கொடுக்க மது ,போதை பழக்கத்தால் உடல் நலம் கெட்டவர்களை மீட்டெடுக்கலாம்.

இதில் உள்ள சோடியம் கெட்ட நீரை வெளியேற்றுகிறது. இதனால் வயிற்று வலி மற்றும் வயிறு சம்பந்தமான நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். வளரும் பருவத்தில் சிறுவர்களும் குழந்தைகளும் அத்திப் பழத்தை தவறாது சாப்பிட, நல்ல உடல் ஆரோக்கியம் பெற்று நலமாக இருக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com