காமுட் என்றால் என்ன தெரியுமா?

Do you know what Kamut is?
Do you know what Kamut is?https://www.diet-health.info
Published on

பொதுவாக, நாம் அனைவரும் சிற்றுண்டிக்காக உபயோகப்படுத்தும் தானியங்களில் அரிசிக்கு அடுத்தபடியாக வருவது கோதுமையாகத்தான் இருக்கும். பூரி, சப்பாத்தி, உப்புமா, தோசை, பிரட் என பல வகை உணவுகளை கோதுமையை மூலமாகக் கொண்டு தயாரிக்க முடியும். வட இந்தியர்களின் பிரதான உணவு சப்பாத்தி எனலாம்.

இந்தியாவில் கோதுமை பல ரகங்களில் விளைவிக்கப்படுகிறது. அதில் ஒரு வகையே காமுட் என்பது. அளவில் கொஞ்சம் பெரிதாக இருக்கும் 'கொராசன் வீட்' (Khorasan Wheat) என்ற வகை கோதுமையின் பிராண்ட் நேம் 'காமுட்' என்பதாகும். இதிலிருக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

காமுட் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த ஒரு தானியம். உடலுக்கு முழு ஆரோக்கியம் தரக்கூடிய புரோட்டீன், நார்ச்சத்து, சிங்க் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் இதில் உள்ளன.

இதிலுள்ள செலீனியம் என்ற சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடன்ட்டானது செல்கள் சிதையுறுவதைத் தடுக்கிறது; நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது; நாள்பட்ட வியாதிகள் வரும் ஆபத்தைத் குறைக்கிறது.

முழு தானியமான காமுட் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க வல்லது. அதன் மூலம் இதய நாளங்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது தடுக்கப்பட்டு, இதய ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளை சுலபமாக நாம் வழிக்குக் கொண்டுவருவது எப்படி தெரியுமா?
Do you know what Kamut is?

இதிலுள்ள நார்ச்சத்துக்கள் ஜீரண மண்டல உறுப்புகளின் செயல்பாட்டை சிறப்பாக்கி குடல் ஆரோக்கியம் பெற உதவுகின்றன; கழிவுகள் சுலபமாக வெளியேறவும் செய்கின்றன.

இதிலுள்ள காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் படிப்படியாக தொடர்ந்து உடலுக்கு சக்தியை அளிக்கின்றன. அதனால் இரத்த சர்க்கரை அளவும் சமநிலையில் வைத்துப் பராமரிக்கப்படுகிறது.

இவ்விதமான நிறைவான சத்துக்களையும் சக்தியையும் நாள் முழுக்க கிடைக்கச் செய்யும் காமுட் கோதுமையை நாமும் அதிகம் பயன்படுத்தி பயனடைவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com