கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் பயோட்டின் நிறைந்த 10 உணவுகள் எவை தெரியுமா?

Do you know which are 10 biotin rich foods for hair growth?
Do you know which are 10 biotin rich foods for hair growth?https://tamil.webdunia.com

நீண்ட மற்றும் பளபளப்பான கூந்தல் அனைவரின் விருப்பமாகும். நம்மில் பெரும்பாலோர் பல்வேறு முடி பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துகிறோம். அழகு நிலையங்களுக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்கிறோம். என்னதான் தலைக்கு சீவக்காய் அல்லது ஷாம்பு போட்டு அலசினாலும் உட்கொள்ளும் உணவு என்பது மிகவும் முக்கியம். பயோடின் நிறைந்த உணவு வகைகள் தலைமுடியின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக இருக்கின்றன. முடியின் அடர்த்தி மற்றும் அழகான தோற்றத்திற்கு இது முக்கியப் பங்காற்றுகிறது. இது கண், முடி, சருமம், கல்லீரல் மற்றும் மூளையின் செயல்பாட்டிற்கு முக்கியமானது. பயோட்டின் நிறைந்த உணவு வகைகள் எவை என்பதைக் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

பயோட்டின் என்பது வைட்டமின் பி7 மற்றும் வைட்டமின் எச் ஆகும். இது உடலின் வளர்சிதை மாற்ற செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பயோட்டின் நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். அதனால் நமது உடல் அதை சேமிக்காது. எனவே, போதுமான அளவு பயோட்டினை தவறாமல் உட்கொள்ள வேண்டும். இது இயற்கையாகவே முட்டை, விதைகள் மற்றும் கொட்டைகள் போன்ற பல உணவுகளில் காணப்படுகிறது.

பயோட்டின் நிறைந்த உணவு வகைகள்:

1. முட்டையின் மஞ்சள் கரு: முட்டையில் பி வைட்டமின்கள், புரதம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, முட்டையின் மஞ்சள் கரு பயோட்டின் நிறைந்த ஆதாரமாகும். முட்டைகளை எப்போதும் முழுதாக சமைத்து உண்ண வேண்டும். முட்டையை பச்சையாக சாப்பிடும்போது அதன் வெள்ளை கருவில் அவிடின் என்கிற புரதம் உள்ளது. இது பயோட்டின் சத்தை உடல் உறிஞ்சுவதைத் தடுத்துவிடும். எனவே, முட்டையை வேக வைத்து அல்லது ஆம்லெட் போட்டு அல்லது பொரித்து உண்ணுவதே சிறந்தது.

2. பருப்பு வகைகள்: பட்டாணி, பீன்ஸ் போன்ற பருப்பு வகைகளில் புரதம், நார்ச்சத்து மற்றும் ஏராளமான நுண்ணூட்டச் சத்துக்கள் அதிகம். அதிலும் சோயா பீன்ஸ் மற்றும் வேர்க்கடலை போன்ற பருப்பு வகைகளில் பயோடின் சத்து நிறைந்திருக்கிறது. இவற்றை அதிக அளவில் அடிக்கடி எடுத்துக்கொண்டால் முடி வளர்ச்சி நன்கு இருக்கும்.

3. கொட்டைகள் மற்றும் விதைகள்: கொட்டைகள் மற்றும் விதைகளில் நார்ச்சத்து, நிறைவுறா கொழுப்பு, புரதம் மற்றும் பயோடின் சத்து நிறைந்துள்ளது. கொட்டைகள் மற்றும் விதைகளை பச்சையாக உண்ணலாம். சாலடுகளில் பயன்படுத்தலாம். பாஸ்தா உணவுகளில் சேர்க்கலாம்.

4. கல்லீரல்: நமது உடலின் பெரும்பாலான பயோட்டின் கல்லீரலில் சேமிக்கப்படுகிறது. இறைச்சி வகைகளில் பயோடின் அதிகமாக உள்ளது. குறிப்பாக, கோழியின் கல்லீரலில் பயோட்டின் அதிகமாக உள்ளது.

5. இனிப்பு உருளைக்கிழங்கு: இனிப்பு உருளைக்கிழங்கு வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, பயோட்டின் மற்றும் கரோட்டினாய்டு ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்துள்ளது. இனிப்பு உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து உண்ணலாம் அல்லது மைக்ரோவேவ் அவனில் சமைத்து சாப்பிடலாம். தோல் உரித்து வேகவைத்து வீட்டில் செய்யப்படும் வெஜ் பர்கர் அல்லது பஜ்ஜிகளில் சேர்த்தும் உண்ணலாம்.

6. காளான்கள்: காளான்கள் ஊட்டச்சத்து நிறைந்த பூஞ்சைகள். அவை ஏராளமான பயோட்டின் உட்பட பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. காளான்களை வீட்டில் தயாரிக்கப்படும் நூடுல்ஸ், பீட்சாக்கள் போன்றவற்றில் கலந்து சாஸ் மற்றும் கிரேவியோடு சேர்த்து உண்ணலாம். சாலடுகளிலும் சேர்க்கலாம்.

7. வாழைப்பழங்கள்: வாழைப் பழங்களில் நார்ச்சத்து கார்போஹைட்ரேடுகள் பி வைட்டமின்கள், தாமிரம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன. மேலும், பயோட்டின் சிறந்த ஆதாரமாகக் கருதப்படுகிறது. தினமும் ஒரு வாழைப்பழம் உண்டு வந்தால் முடி உதிர்வு என்ற பேச்சிற்கு இடம் இருக்காது.

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் முன்பு விவாதத்தில் ஈடுபடும் பெற்றோருக்கு சில ஆலோசனைகள்!
Do you know which are 10 biotin rich foods for hair growth?

8. புரோக்கோலி: புரோக்கோலி நார்ச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி நிறைந்துள்ளதால், மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றாகும்.

9. ஈஸ்ட்: ஊட்டச்சத்து ஈஸ்ட் மற்றும் ப்ரூவரின் ஈஸ்ட் இரண்டும் பயோட்டின் வழங்குகின்றன. ப்ரூவரின் ஈஸ்ட், உலர் ஆக்டிவ் ஈஸ்ட் என்றும் அழைக்கப்படுகிறது, இது பீர் மற்றும் புளிப்பு ரொட்டியை காய்ச்சப் பயன்படுகிறது. மாறாக, ஊட்டச்சத்து ஈஸ்ட் என்பது ஒரு செயலற்ற ஈஸ்ட் ஆகும். இது பெரும்பாலும் பாலாடைக்கட்டி தயாரிக்கப் பயன்படுகிறது. ஊட்டச்சத்து ஈஸ்டில் 21 mcg பயோட்டின் உள்ளது.

10. அவகோடா அல்லது வெண்ணெய் பழங்கள்: வெண்ணெய் பழங்கள் ஃபோலேட் மற்றும் நிறைவுறா கொழுப்புகளின் நல்ல ஆதாரமாக அறியப்படுகின்றன. இவற்றில் பயோட்டின் சத்து நிரம்பி உள்ளது. எனவே, இதை அடிக்கடி உண்டு வந்தால் கூந்தல் நல்ல வளர்ச்சி பெறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com